சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாக்டோ ஜியோ போராட்டம்.. ரூ.7500 சம்பளத்துக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. அரசு முடிவு!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது பெரிதாகி உள்ளது.

Jacto Geo Protest: TN Gov employs temporary teachers to teach students

தற்போது ஆசிரியர்கள் எல்லோரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு இன்னும் ஏற்கவில்லை. இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தையும் இன்னும் நடக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இந்த போராட்டம் தொடர்பாக தமிழக அரசு பரபர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஆசிரியர்கள் எல்லோரும் பணிக்கு திரும்பவில்லை என்றால் உடனடியாக வேறு நபர்கள் அந்த பணியில் அமர்த்தப்படுவார்கள். தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறியது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர். உடனே இந்த தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால் இந்த தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது. வரும் ஜனவரி 28-ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் அரசு தெரிவித்து இருக்கிறது.

ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 3 நாட்கள் ஊதியம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இவர்களுக்கு 17B-விதியின் கீழ் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Jacto Geo Protest: TN Gov employs temporary teachers to teach students after 4 days of strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X