ஜாபர் சாதிக் இரு ஐபோன்களை உடைத்து நேப்பியர் பாலத்தில் வீசியது ஏன்? வழக்கறிஞர்கள் பரபரப்பு பேட்டி
சென்னை: போதை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜாபர் சாதிக்கின் ஐபோன்களை உடைத்து நேப்பியர் பாலத்தில் வீசியது குறித்து வழக்கறிஞர்கள் கூட்டாக பேட்டி கொடுத்துள்ளனர்.
ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது: அமீர் தனது வாக்குமூலத்தில் ஒரு 14 ஆண்டுகளாக முகமது என்பவரின் மூலம் ஜாபர் சாதிக்கை தெரியும் என குறிப்பிட்டிருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு படம் இயக்கலாம் என்ற ஐடியாவில் அமீர் இருந்த போது, அந்த படத்திற்கு ஜாபர் சாதிக் புரொடியூசராக இருக்க முடிவு செய்தார். அதன்படி அமீர் இயக்கிய படத்திற்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக இருந்தார்.
எனவே இந்த படத்தின் மூலம் மட்டுமே ஜாபர் சாதிக்கை தனக்கு தெரியும் என்றும் அவர் என்ன தொழில் செய்கிறார் என்றெல்லாம் தனக்கு தெரியாது என்றும் அமீர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக் செல்போன்களை உடைத்து போட்டதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறுகிறார்கள்.
ஆனால் கஸ்டடியில் இருக்கும் போது கொடுக்கும் வாக்குமூலங்கள் எல்லாமே மிரட்டி பணிய வைத்து பெறப்பட்டது. இவையெல்லாம் நீதிமன்ற விசாரணையின் போது எடுபடாது. என்சிபி காவலில் இருக்கும் போது கொடுக்கும் வாக்குமூலங்களை எல்லாம் நீதிமன்றம் நம்பாது. எந்த குற்றவாளியாவது ஆமா நான்தான் செய்தேன் என ஒப்புக் கொள்வார்களா?
ரூ 2000 கோடி போதை பொருளையும் ஜாபர் சாதிக்தான் கடத்தினார் என மிரட்டி எழுதி வாங்கவே இது போல் என்சிபி செய்கிறது. குற்றப்பத்திரிகையில் இருக்கும் கையெழுத்து ஜாபர் சாதிக்கினுடையதா என நாங்கள் ஆராய வேண்டும். நாங்கள் பார்த்த குற்றப்பத்திரிகையில் கைதான 5 பேரின் பெயர்களும் இன்னும் சிலரது பெயர்களும் இருந்தன.
ஆனால் அரசியல் கட்சியினரின் பெயர்கள் இருக்கின்றனவா என எனக்கு தெரியவில்லை. ஏனெனில் நான் பார்த்தது 153 பக்கங்கள்தான். ஆனால் அதன் பிறகு என்சிபி அதிகாரிகள் 4500 பக்கங்களை இணைத்துள்ளார்கள். அதன் நகலை நாங்கள் கேட்டுள்ளேன். அது வந்தால்தான் எங்களால் எதையும் சொல்ல முடியும்.
நான் 10ஆம் தேதி திகார் சிறையில் ஜாபர் சாதிக்கை சந்திக்கும் போது என்சிபியும் ஈடியும் விசாரித்துக் கொண்டிருந்தனர். என்னிடம் நீதிமன்ற அனுமதி இருந்ததால் என்னை ஒரு 15 நிமிடங்கள் சந்திக்க அனுமதித்தனர். அப்போது ஜாபர், என்னிடம் "இந்த வழக்கெல்லாம் ஜோடிக்கப்பட்ட வழக்கு. நான் வெகு விரைவில் இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆவேன்" என அவர் சொல்லியிருந்தார்.
ஜாபர் சாதிக் என்னென்ன திரைப்படங்களை தயாரித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் 1 மாதமாக தலைமறைவாக இருந்ததாக அதிகாரி ஒருவர் தவறான தகவலை கொடுத்துள்ளார். ஆனால் மங்கை ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் இருந்த வீடியோவை சமர்ப்பித்தோம். இதனால் அந்த அதிகாரி De promote செய்யப்பட்டார். இவ்வாறு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பின்னணி என்ன?: ஜாபர் சாதிக் என்பவர் உணவு டெலிவரி செய்வதாக வெளிநாடுகளுக்கு ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருட்களை கடத்தியதாக அவரும் அவருடைய கூட்டாளிகள் என கூறி சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அமீரின் பெயரை ஜாபர் சாதிக் கூறியதாக கூறி அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications