சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வலுக்கும் ஜெய்பீம் சர்ச்சை.. கொந்தளிக்கும் பா.ம.க.. நடிகர் சூர்யாவை கைது செய்யக்கோரி போலீசில் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. நடிகர் சூர்யா, ஜோதிகா படத்தை தயாரித்துள்ளனர். ஞானவேல் இயக்கியுள்ளார். ஒதுக்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கதாநாயகன் அவர்களுக்கு நீதி பெற்று தருவதே படத்தின் கதை.

ஜெய்பீம் திரைப்படம் சமூக நீதியை பறைசாற்றுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இதேபோல் அரசியல் கட்சியினர், திரையுலகினர் உள்ளிட்ட பலர் சூர்யாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவத்து வந்தனர்.

தருமபுரி எம்பி செந்தில் எங்கே? நீங்க வந்தா தான் சரியா இருக்கும்! ஏங்கும் சூர்யா ரசிகர்கள்! தருமபுரி எம்பி செந்தில் எங்கே? நீங்க வந்தா தான் சரியா இருக்கும்! ஏங்கும் சூர்யா ரசிகர்கள்!

ஜெய்பீம் சர்ச்சை

ஜெய்பீம் சர்ச்சை

அதே வேளையில் ஜெய்பீம் படத்தில் சர்ச்சையும் எழுந்தது. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றுள்ள காலண்டர் வைக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்ததது.

நடிகர் சூர்யா பதில்

நடிகர் சூர்யா பதில்

ஒரு சமூகத்தை உயர்த்தும் நோக்கில் வேறு ஒரு சமூகத்தை தாழ்த்தி படம் எடுக்ககூடாது என்றும் அக்னி கலசம் இடம்பெற்றுள்ளதை நீக்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நடிகர் சூர்யா ''ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணர்த்துவதே ஜெய்பீம் படத்தின் நோக்கம். எந்த சமூகத்தினரையும் அவமதிக்கவில்லை'' என்று கூறினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

இதற்கிடையே 'நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு' என்று பாமக நிர்வாகி ஒருவர் பேசியதால் சர்ச்சை அதிகமானது. டைரக்டர் ஞானவேல் நடிகர் சூர்யா தயாரிப்பாளர் ஜோதிகா சூர்யா ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் இதுபோன்ற படங்களை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் வராத வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி வன்னியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

வன்னியர் சங்கம் புகார்

வன்னியர் சங்கம் புகார்

இந்த நிலையில் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ராஜா மீது வழக்குபேபதிவு செய்யக்கோரி காஞ்சிபுரம் அருகே உள்ள சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதேபோல் திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் வன்னியர் சங்க நிர்வாகிகள் புகார் மனு வழங்கினர். எதிர்காலத்தில் இதுபோன்ற படங்களை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் வராத வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் மனுவில் கூறி இருந்தனர்.

English summary
Vanniyar community have lodged a complaint with the police demanding the arrest of actor Surya and director Gnanavala in connection with the Jai Bhim movie controversy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X