“திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க”.. ஜெய் பீம், வேட்டையன் படங்களின் இயக்குநர் ஞானவேல் வேண்டுகோள்!
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு 'ஜெய் பீம்', 'வேட்டையன்' படங்களின் இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பாஜக, பாமக, தமாகா, அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும், அதிமுக, தேமுதிக தனி கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் இந்த லோக்சபா தேர்தலில் களம் காண்கின்றன.
தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் தமிழ்நாட்டில் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில், "ஜெய் பீம்", "வேட்டையன்" படங்களின் இயக்குநர் த.செ.ஞானவேல், திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் த.செ ஞானவேல் தனது சமூக வலைதள பதிவில், "வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.
மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பணியாற்றிய த.செ.ஞானவேல், 'கூட்டத்தில் ஒருவன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யா நடித்த "ஜெய் பீம்" படத்தின் மூலம் தனது பெயரை தமிழ் சினிமாவில் அழுத்தமாக நிறுவினார். அடுத்த படத்தில் ரஜினிகாந்த்தை இயக்கி வருகிறார் ஞானவேல். "வேட்டையன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

ஜெய் பீம் படம் வெளியானபோது, பாமகவினர் ஏராளமானோர் ஜெய் பீம் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்துகிற காட்சிகளை ஞானவேல் இடம் பெறச் செய்தார் என்பது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தற்போது, பாமக, பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குபவரும், நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமானவருமான த.செ.ஞானவேல் இந்த லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications