"அவங்களை" "அப்படி" சொல்லக் கூடாது என சொல்வீகளா? ஜெய் ஶ்ரீராம் எங்கள் உரிமை: பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை: "ஜெய் ஸ்ரீராம்' என்பது அவரவரின் உரிமையே. இதில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை" என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ஜெய் ஶ்ரீராம் முழக்கம் எழுப்பப்பட்டது 'வெறுப்பேற்றும்' கோஷம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இதனை பாஜக தலைவர்கள் தொடர்ந்து நியாயப்படுத்தி கருத்துகளையும் வாதங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஐயோ! பொது வெளியில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுகிறார்களே என்று பதை பதைத்து போகின்றார்கள் மத சார்பற்ற நல்லவர்கள் (?) சிலர்.
துணிவு உள்ளதா?: சரி! இனிமேல், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பொது வெளியில் தங்கள் கடவுள்கள் குறித்து எந்த கோஷங்களையோ, வழிபாடுகளையோ, பிரச்சாரங்களையோ மேற்கொள்ளக்கூடாது என்று சொல்ல துணிவு உள்ளதா? எந்த மதத்தையும் நாம் இழிவுபடுத்தவோ அல்லது எந்த மத சுதந்திரத்தையும் தடுக்கவோ கூடாது, முடியாது. அது தான் மத சார்பற்ற தன்மை.
ஐயோ! பொது வெளியில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுகிறார்களே என்று பதை பதைத்து போகின்றார்கள் மத சார்பற்ற நல்லவர்கள் (?) சிலர்.
— Narayanan Thirupathy (@narayanantbjp) October 16, 2023
சரி! இனிமேல், இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் பொது வெளியில் தங்கள் கடவுள்கள் குறித்து எந்த கோஷங்களையோ, வழிபாடுகளையோ, பிரச்சாரங்களையோ மேற்கொள்ளக்கூடாது…
அவங்க நிறுத்துவாங்களா?: மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லக்கூடாது என்றால், இனி ஹிந்துக்களின் எதிரில் 'அல்லாஹு அக்பர்' என்றோ, 'இயேசு அழைக்கிறார்' என்றோ சொல்லக்கூடாது என்று கோரிக்கை விடுப்பார்களா? அல்லாஹூ அக்பர் என்றும், இயேசு கிறிஸ்து என்றும் சொல்வது அவரவர் உரிமை என்றால் 'ஜெய் ஸ்ரீராம்' என்பதும் அவரவரின் உரிமையே. இதில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை. இவ்வாறு நாராயணன் திருப்பதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் ஜெய் ஶ்ரீராம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அதிரடியாக, 10 முறை ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டு இதுதான் ஒற்றை வரி பதில் என கூறினார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications