ஓலை குடிசையில் பிக்பாஸ் தாமரையின் அம்மா.. சொந்த வீட்டை கட்டி கொடுக்கும் ஜேம்ஸ் வசந்தன்.. சபாஷ்!
சென்னை: ஓலை குடிசையில் வசித்து வரும் பிக்பாஸ் பிரபலம் தாமரைச் செல்வியின் தாய்க்காக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புதியதொரு வீட்டை கட்டி வருகிறார். அந்த திட்டத்திற்கு தாமரை இல்லம் என பெயரிட்டுள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அறிமுகமே இல்லாமல் நிறைய பேர் பங்கேற்றார்கள். அதில் நாடகக் கலைஞர் தாமரைச் செல்வியும் ஒருவர்.
இவர் கோயில் திருவிழாக்களின் போது மக்கள் பொழுதுபோக்க நடத்தப்படும் நாடகங்களின் போது புராண கதைகளை அடிப்படையாக கொண்டு நாடகம் போடுகிறார்கள்.

வேஷம்
அதில் பல நாடகங்களில் வேஷமிட்டு தாமரைச் செல்வி நடித்துள்ளார். மிக ஏழ்மையான குடும்பம். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் முதல்முறையாக பார்த்து இந்த பொருள் இப்படித்தான் இருக்குமோ என தெரிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது.

மாடி வீடு ஓலை வீடு
இந்த நிலையில் மாடி வீட்டில் தாமரை வசித்து வரும் நிலையில் அவரது தாய் உள்ளிட்டோர் தாமரை நாடகத்தில் நடித்து அதன் மூலம் சிறுக சிறுக கட்டிக் கொடுத்த ஓலை வீட்டில் வசித்து வருகிறார்கள். இதை ஒரு டிவி சேனல் ஒன்று தாமரையின் தாய் வீட்டை வீடியோ எடுத்திருந்தது. அதில் அவரது தாய் கண்ணீருடன் எங்கள் மகள் தாமரை கட்டிக் கொடுத்த வீடு. எங்களால் சீர்படுத்த முடியாமல் வெயில் மழையில் அவதிப்படுகிறோம் என்றார்.

வீடு கட்டும் ஜேம்ஸ் வசந்தன்
இது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் காதுகளை எட்டியது. இதையடுத்து அவர் தாமரைச் செல்வியின் அம்மாவுக்கு சொந்த வீடு கட்டித் தருவதாக கூறியுள்ளார். மேலும் தாமரையின் தாயை நேரில் சந்தித்தும் ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார். தாமரை இல்லம் என்ற பெயரில் இவர் இந்த வீடு கட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
தாமரைக்கு வீடு கட்டும் ஜேம்ஸ் வசந்தன்
தாமரையின் தாய்க்கு வீடு கட்டும் இந்த உன்னத காரியத்தில் யாருக்கெல்லாம் பணம் கொடுத்து உதவ முடியுமோ அவர்கள் [email protected] என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இல்லாதவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யும் ஜேம்ஸ் வசந்தன் தனது இசையில் திறமையுள்ளவர்களுக்கு பாடவும் வாய்ப்பு வழங்குகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications