ஜின்னாவை முறியடித்தவர் அபுல் கலாம் ஆசாத்.. அவர் பாடத்தையே நீக்குவதா? ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த பதிவு
சென்னை: இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் குறித்த வரலாற்று NCERT பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட கொடுமையான ஒரு முடிவை கோழைத்தனமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய பதிவை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பதிவில் தெரிவித்து இருப்பதாவது, "NCERT பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் கருத்தியலுக்கு 'ஒவ்வாத' பல்வேறு விஷயங்களை நீக்குவதை இன்றைய மத்திய அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வரிசையில் நடந்த அதி முக்கியமான நீக்கல் அபுல் கலாம் ஆசாத் பற்றியது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். காங்கிரஸ் தலைவராக பல வருடங்கள் இயங்கியவர். இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பணியாற்றியவர். இவர் தலைமையில்தான் பல்வேறு ஐஐடிக்கள் துவங்கப்பபட்டன. இவர் தலைமையில்தான் IISc நிறுவப்பட்டது. இவை அனைத்தையும் விட இந்திய நாடு இந்துக்களுக்கு மட்டுமே, இங்கே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஜின்னாவின் பிரச்சாரத்தை முறியடிக்க முக்கிய ஆயுதமாக இருந்தவர்.
இந்தியா ஒரு செக்யூலர் தேசம். மனிதர்களாக இருக்கும், மனிதர்களாக வாழ்வைத் தொடர விரும்பும் அனைவருக்கும் இங்கே இடம் உண்டு என்று நேரு முன்னெடுத்த ஆச்சரிய பரப்புரைக்கு தோளோடு தோள் நின்று உறுதி செய்து இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க உதவியவர். அவரது பெயர் மற்றும் அவர் பற்றிய குறிப்புகள் பதினோராம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய விஷயம் என்னவெனில் வழக்கமாக இப்படிப்பட்ட நீக்கங்கள் குறித்த தனியான அறிக்கையை NCERT பதிப்பிக்கும். ஆனால் அவர் பெயர் நீக்கப்பட்டது அமைதியாக, சத்தமின்றி நடந்திருக்கிறது. கொடுமையான ஒரு முடிவை கோழைத்தனமாக நிறைவேற்றியிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு செக்யூலர் வரலாறு. அங்கே இந்து, முஸ்லிம், கிறித்துவர், பார்சி என்று வேறுபாடின்றி தலைவர்கள் ஈடுபட்டனர்.

அதே இயக்கம்தான் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை தேசிய சீர்திருத்தமாக முன்னெடுத்தது. மத சீர்திருத்தங்களை முக்கிய அம்சங்களாக முன்னெடுத்தது. சாதி ஒடுக்குமுறையை களைந்து சமதர்ம சமுதாயமாக இந்தியாவை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மதவாதங்களை தள்ளி வைத்து அறிவியலை கைக்கொண்டு நவீன சமூகத்தை கட்டமைக்க முனைந்தது.
அப்படிப்பட்ட முயற்சிகளில் காந்தி, நேரு, அம்பேத்கர், படேல் போன்றோருக்கு இருக்கும் அதே அளவு பங்கு ஆசாத்துக்கும் இருக்கிறது. உண்மையிலேயே உயர்ந்த மனிதர்கள் என்பவர் இவர்கள்தான்.
ஆனால், இது எதிலும் பங்கு கொள்ளாமல் இந்து மதவாதத்தை போற்றிக் கொண்டு, இந்து மதத்தில் இருந்த அனைத்து பிற்போக்கு, மூடப் பழக்கங்களையும், வன்முறைகளையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம் ஒன்று இருந்தது.
சின்னச் சின்ன விஷயங்கள் தாண்டி எதையும் யோசிக்கத் தெரிந்திராத சின்ன மனிதர்கள் அவர்கள். அந்தச் சின்ன மனிதர்களை தலைவர்களாக வரிந்து கொண்டு இன்றைய சின்ன மனிதர்கள் அந்த மாபெரும் உயர்ந்த மனிதர்களின் வரலாற்றுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய மத்திய அரசு ஏன் நீங்க வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் அதி முக்கியமானதாக நான் கருதுவது இந்தியப் பாடத்திட்டத்தில் இவர்கள் விதைக்கும் இப்படிப்பட்ட விஷ விதைகள்தான்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications