ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த சென்சார் போர்டு! நீளும் சிக்கல்
சென்னை: 'ஜனநாயகன்' பட தணிக்கை சான்று விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. U/A வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்பதால், தங்களது வாதங்களை கேட்காமல், உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என CBFC கேவியட் தாக்கல் செய்துள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரோடக்ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மாக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஆஷா முன்பு வந்த போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கின் தீர்ப்பை கடந்த 9 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து விஜய்யின் ஜனநாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தனி நீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
அதைத்தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பிலும், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கின் தீர்ப்பு 27 ஆம் தேதி வெளியானது.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை கடந்த 27 ஆம் தேதி ரத்து செய்திது சென்னை உயர் நீதிமன்றம். தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடுவது குறித்து ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானதுஇந்நிலையில், தணிக்கை சான்றிதழ் கோரி 'ஜனநாயகன்' படக்குழு அணுகினால் தங்கள் தரப்பு வாதங்களாஇ கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
-
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications