விஜய்யின் "ஜனநாயகன்" ரிலீஸை ஜனவரி 10க்கு ஏன் ஒத்தி வைக்கக்கூடாது? நீதிபதி கேட்ட கேள்வி!
சென்னை: ஜனநாயகன் படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதி ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்குமே என்று கூறிய நீதிபதி பிடி ஆஷா, மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி டியோல், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், இது அவரின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை காண காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ்க்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை தணிக்கை சான்று அளிக்கப்படவில்லை. தணிக்கை சான்றுக்கு தாமதமாகி வருவதால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறது.
இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், கடந்த 19ஆம் தேதி படம் பார்த்த தணிக்கை குழு சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. பின்னர் தணிக்கை குழு பரிந்துரைத்த மாற்றங்களை செய்து அனுப்பிய போதும், இதுவரை சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றுக்கு பரிந்துரைத்த நிலையில், தணிக்கை சான்று குறித்து முடிவு எடுக்க மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தெரிவித்து சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஜனநாயகன் ரிலீஸ் தேதியை நிர்ணயித்தாலும் நாங்கள் சட்டப்படிதான் செல்ல முடியும் என்று வாதிட்டார். இதனை கேட்டுக் கொண்ட நீதிபதி, ஜனநாயகன் படத்தின் ரிலீஸை ஏன் ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக் கூடாது. தை பிறந்தால் வழி பிறக்குமே? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications