Jana nayagan: "ஜனநாயகன் படத்தின் மேல் ஏகப்பட்ட புகார்கள்" வழக்கை மீண்டும் தனி நீதிபதிக்கே அனுப்பிய ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் படத்திற்கு U/A சான்றளிக்க கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்ட தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவையும் ரத்து செய்துள்ளனர். இதனால் ஜனநாயகன் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுத்து, மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, படத் தயாரிப்புக் குழு இந்த வாரியத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

jana nayagan

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9 அன்று, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். அத்துடன், 'ஜனநாயகன்' படத்திற்கு எந்தத் தடையுமின்றி உடனடியாகச் சான்றிதழ் வெளியிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனு

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜனவரி 20-க்கு ஒத்திவைத்தது. இந்த இடைக்காலத் தடையை உடனடியாக நீக்கக் கோரி, படத் தயாரிப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே அணுகுமாறு திட்டவட்டமாக அறிவுறுத்தி, மனுவை முடித்து வைத்தனர்.

நீதிபதிகள் அமர்வு

அதன்படி, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் ஜனவரி 20 அன்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "படத்தை மறுஆய்வுக்கு அனுப்பும் முடிவு ஜனவரி 5-ஆம் தேதியே 'இ-சினி பிரம்மாண்' இணையதளம் வாயிலாக தயாரிப்புக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

தயாரிப்புக் குழு சான்றிதழ்

சுந்தரேசன் மேலும் வாதிடுகையில், "தயாரிப்புக் குழு சான்றிதழ் கேட்டு ஜனவரி 6-ல் வழக்குத் தொடங்கி, ஜனவரி 9-ல் சாதகமான உத்தரவைப் பெற்றது. கேட்காத பரிகாரத்தைத் தனி நீதிபதி வழங்கியது சட்டத்துக்குப் புறம்பானது" என்றார். படத் தயாரிப்புக் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர்களான சதீஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

நஷ்டம்

தயாரிப்புக் குழு வழக்கறிஞர்கள், "தனி நீதிபதி தீர்ப்பை வழங்கிய உடனேயே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. அத்துடன், தணிக்கை வாரியம் வெளிப்படையாகச் செயல்படவில்லை" என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முக்கியக் கருத்துக்களை முன்வைத்தனர்.

நீதிபதிகள், "நீதிமன்ற நடைமுறைகளை ஒரே நாளில் முடித்து தீர்வு கோருவது ஏற்க இயலாது. சான்றிதழ் பெறும் முன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யக் கூடாது. இயற்கை நீதியைப் பின்பற்றியே எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும்" என்று சுட்டிக்காட்டினர். இதனையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு

இந்த நிலையில் 'ஜனநாயகன்' சென்சார் வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா, நீதிபதி அருள்முருகன் தலைமையிலான அமர்வு வழங்கியது. அதில் படத்திற்கு யுஏ சான்றிதழ் அளிக்குமாறு கடந்த 9ஆம் தேதி தனி நீதிபதி உத்தரவிட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த பட வழக்கு மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அங்கு தயாரிப்பு நிறுவனம் புதிய மனு தாக்கல் செய்யலாம். ஜனநாயகன் படத்திற்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளன என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+