ஜனநாயகன் ரிலீஸ் தாமதம்.. நான் முன்னதாகவே கணித்திருந்தேன்.. முதல்முறையாக வாய் திறந்த விஜய்!
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாதது கவலை அளிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாக கூறிய விஜய், என்னுடைய அரசியலுக்காக படங்கள் குறி வைக்கப்படலாம் என்று தயாராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழுக்காக டிசம்பர் 20ஆம் தேதி தட்கல் முறையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் 22ஆம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக வாய்மொழியாக கூறியுள்ளனர்.

ஆனால் படத்தை பார்த்த 5 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்ற ஒருவர் புகார் அளித்ததன் காரணமாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை பார்க்க அனுப்ப முடிவு செய்யப்பட்டது. சென்சார் சான்றிதழ் தாமதமாவதால், ஜனநாயகன் படக்குழு நீதிமன்றம் சென்றது. இதன்பின் சென்சாரி வாரியம் இன்னும் படத்தையே பார்க்கவில்லை.
நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே படத்தை பார்த்து சென்சார் சான்றிதழ் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே ஜனநாயகன் படக்குழு வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காததை கண்டித்து ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பிக்கள் குரல் கொடுத்தனர்.
இதற்கு விஜய் ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. அதேபோல் தவெக செயல் வீரர்கள் கூட்டத்திலும் கூட விஜய் ஜனநாயகன் தொடர்பாக பேசவில்லை. இது விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விஜய்யை நம்பி ஜனநாயகன் படத்தை ரூ.500 கோடிக்கு எடுத்த தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் போராடி வருகிறார். அவருக்கு ஆதரவாக கூட விஜய் ஒரு வார்த்தை பேசவில்லை.
இந்த நிலையில் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜய் ஜனநாயகன் தொடர்பாக பேசியுள்ளார். அதில் விஜய் பேசுகையில், ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. தயாரிப்பாளருக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். என்னுடைய அரசியலுக்காக என் படங்கள் குறி வைக்கப்படலாம் என்றும் கணித்திருந்தேன்.
அதற்கான மனதளவில் தயாராகவே இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஷாரூக் கான் தான் என்னுடைய ரோல் மாடல் என்றும் கூறியுள்ளார். விஜய் தொடக்க காலம் முதலே தன்னை ரஜினி ரசிகராக அடையாளப்படுத்தி வந்திருக்கிறார். இளைய தளபதி பட்டமே ரஜினி படத்தில் இருந்து எடுத்துக் கொண்டதுதான். திடீரென ஷாரூக் கானை ரோல் மாடல் என்று கூறி இருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.
-
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications