ஜனநாயகன் படத்திற்கு எப்போது சென்சார்? உச்சக்கட்ட குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பாக இன்று மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என சொல்லப்பட்டது. இந்த படத்தை சென்சார் போர்டு ரிவைஸிங் கமிட்டி மீண்டும் பார்க்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளானது.

தணிக்கை வாரிய மறுஆய்வுக்குழுவின் பரிசீலனையில் இருந்தபோதே, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீஸார் மூவர் வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 'ஜனநாயகன்' பட எடிட்டிங் ஸ்டுடியோவின் உதவி எடிட்டரே கசிவுக்குக் காரணம் என சைபர் க்ரைம் குற்றம்சாட்டியுள்ளது.
உமா சங்கர் தன் மனுவில், "எனக்கும் திரைத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க போலீஸார் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்," எனக் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், உமா சங்கர்தான் முக்கியக் குற்றவாளி எனவும், அவரே படத்தை வெளியிட்டார் எனவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். படம் கசிந்த மறுநாளே உமா சங்கர் இதயப் பிரச்சனை எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
கைதானவர்கள் அளித்த வாக்குமூல அடிப்படையில் உமா சங்கர் சேர்க்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். நீதிபதி சி.குமரப்பன் விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இந்த படத்தை சென்சார் போர்டு ரிவைஸிங் கமிட்டியை சேர்ந்த 2 பேர் இன்று பிற்பகல் மீண்டும் பார்க்கவுள்ளதாகவும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இன்று மாலை தெரியவரும் என்றும் சொல்லப்பட்டது.. இருப்பினும் இன்று மாலை சென்சார் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி












Click it and Unblock the Notifications