‘ஜனநாயகன்’ ரீமேக்.. பாலையா படத்திற்கு வந்த மவுசு.. ஓடிடிக்களே நம்ப முடியாத ட்விஸ்ட்
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படம் தொடர்பான ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் (பாலைய்யா என்று செல்லமாக அழைப்பார்கள்) படத்திற்கு திடீரென மவுசு கூடியுள்ளது.

அரசியல் என்ட்ரிக்கு அஸ்திவாரம் 'ஜனநாயகன்'
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார். எப்படியாவது 2026 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பெரிய கூட்டணி உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறார். நிலையில் ஜனநாயகன் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால், படத்தில் இடம்பெறும் வசனங்கள் மற்றும் காட்சிகள் நிச்சயம் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஜனநாயகன்' என்ற தலைப்பே அவர் சொல்ல வரும் அரசியல் செய்தியைத் தாங்கி வருவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். .
ரீமேக் சர்ச்சை ஏன் வந்தது
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, இது தெலுங்கில் பாலைய்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று பேசப்பட்டது. ஆனால், ஜனநாயகன் படக்குழுவினர் இதனை ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வந்தனர்.
டிரெய்லரால் வந்த சந்தேகம்
.
இந்நிலையில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வெளியான 'ஜனநாயகன்' படத்தின் டிரெய்லர் இந்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. டிரெய்லரின் பெரும்பாலான காட்சிகள் 'பகவந்த் கேசரி' படத்துடன் ஒத்துப்போவதைக் கண்ட ரசிகர்கள், இது அந்த படத்தின் ரீமேக் தானோ என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் விஜய்யின் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
ஓடிடியில் முதலிடம்
இந்த ரீமேக் விவாதத்தின் விளைவாக, 'பகவந்த் கேசரி' படத்தின் கதைதான் என்ன? என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, ஓடிடி தளத்தில் அந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. விளைவு, ஓடிடி டிரெண்டிங்கில் அந்தப் படம் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தணிக்கை சர்ச்சையும் செங்கோட்டையனின் பதிலடியும்:
இதற்கிடையில், 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கிளம்பிய கேள்விக்கு, த.வெ.க. தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அதிரடியான பதிலை அளித்துள்ளார். "யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்" என அவர் விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாவிடை
சினிமா வாழ்க்கைக்கு 'ஜனநாயகன்' படத்தின் மூலம் விஜய் முற்றுப்புள்ளி வைத்தாலும், இது அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ரீமேக் சர்ச்சை, இன்னொரு பக்கம் தணிக்கை கெடுபிடிகள் என தடைகள் வந்தாலும், "எங்கள் தலைவன் அரசியலில் ஒரு புதிய ஜனநாயகத்தை படைப்பான்" என அவரது த.வெ.க தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். வெள்ளித்திரையில் இருந்து விலகி மக்கள் பணிக்குச் செல்லும் விஜய்க்கு இந்தப் படம் ஒரு சிறப்பான பிரியாவிடையாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பாஜகவுடன் கூட்டணியா? அதிகமா பேசிட்டாங்க.. இப்தார் விருந்தில் பங்கேற்கும் விஜய்.. எந்த இடம் தெரியுமா! -
வார் ரூமுக்கு வந்த விஜய்.. தவெக சீனியர்களுடன் முக்கிய ஆலோசனை! வெளியே வந்ததும் செம உற்சாகம்! -
TVK Vijay: 234 தொகுதிகளுக்கும் வொர்த்தான ஆள் இருக்காங்களா? வேட்பாளர் தேர்விலும் விஜய்க்கு குழப்பம்! -
Jana Nayagan: முடங்கி கிடக்கும் ஜனநாயகன்! சென்சார் போர்டு நாளை எடுக்கும் முக்கிய முடிவு? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
C Voter: விஜய்யால் ஜெயிக்க முடியாது.. பிரசாந்த் கிஷோர் கதிதான்! சி வோட்டர் யஷ்வந்த் தேஷ்முக் கணிப்பு -
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி.. ரஜினியை வைத்து விஜய்யை மொத்தமாக முடித்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய் -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியே கிடையாது.. விஜய் வெளிச்சத்தில் ஒட்டி இருக்கிறார்.. சாடிய இயக்குநர் அமீர்! -
Election Exclusive: விஷப் பரிட்சை வேண்டாம்ணே.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த விஜய்! கூட்டணிக்கு ‘நோ’ சொல்ல என்ன காரணம்? -
விஜய்க்கு புது நெருக்கடி.. கமிஷனர் ஆஃபீஸில் பிக் பாஸ் ஜூலி கொடுத்த புகார்.. தவெக நிர்வாகிகளுக்கு சிக்கல்












Click it and Unblock the Notifications