பொங்கல் பரிசு இருக்கட்டும்! வங்கி கணக்கிற்கு தமிழக அரசே அனுப்பும் ரூ.3000! யாருக்கு? ஏன் தராங்க?
சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஜனவரி மாதத்திற்கான உதவித்தொகை இன்றில் இருந்து வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கனில் முக்கியமான விவரங்கள் இடம்பெற்று உள்ளன.

பொங்கல் பரிசு
தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்டவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறுகிறது.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு ஜனவரி 8ம் தேதி முதல் வழங்கப்படும் நிலையில்.. மற்ற பல திட்டங்களில் வெவ்வேறு பயனாளிகளுக்கு இந்த மாதம் நிதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று முக்கிய திட்டங்களின் மூலம், பயனாளர்கள் மாதம் ரூ.3000 வரை தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்தத் தொகை விடுவிக்கப்படும். ஜனவரி மாதத்திற்கான தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்.
இந்தத் தொகை, அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த உதவித்தொகை பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம்
சுமார் 4 லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோரும் புதிதாக திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு இந்த மாதம் 15ம் தேதி பணம் வழங்கப்படும்.
புதுமைப்பெண் - மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். பயனாளிகள் இளங்கலை படிப்பு படிக்கும் வரை இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மாணவிகள் எங்கும் அலைய வேண்டியதில்லை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
அதேபோல், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் புதல்வன் திட்டம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அரசு உதவி புரிகிறது.
புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த தவணை இந்த வாரம் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.
-
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்












Click it and Unblock the Notifications