பறவைகளின் மர்ம முடிச்சு.. ஜதிங்கா கிராமத்துக்கு தற்கொலை செய்ய கிளம்பி வரும் கூட்டம்! இப்படி நடக்குமா
சென்னை: ஆராய்ச்சி என்பது பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு நீண்டு தொடரும் செயலாகும்.. அந்தவகையில், உயிரினங்கள் பற்றியும் அதிகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இதில் பெரிதும் வியக்கவைத்து வருவது பறவைகள்தான்.. விமானங்களை கண்டுபிடிக்க மனிதனை சிந்திக்கவைத்ததே பறவைகள்தான் என்றபோது, பறவைகளை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.. இதில் பல தகவல்கள் வியக்கவைக்கின்றன. அதில் ஒரு பறவைதான் ஜதிங்கா. இந்த பறவையின் சிறப்பு என்ன தெரியுமா?
சமீபத்தில் சுவீடன் விஞ்ஞானிகள் ஒரு பறவையை பற்றி கண்டறிந்து சொல்லியிருந்தார்கள்.. அந்த சின்ன பறவையின் பெயர் ஸ்விப்ட் swift ..

ஸ்விப்ட் பறவை அதிசயம்
இந்த பறவை, தரையிரங்காமல் 10 மாதங்கள் வரை வானத்திலேயே பறந்து கொண்டிருக்குமாம்.. வானில் பறந்தப்படியே இறையை தேடிக் கொள்ளுமாம். மிச்சம் 2 மாதங்கள் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுமாம்.. குறைந்த எடையுள்ள இந்த குட்டி பறவை எப்போது தூங்கும் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை என்றனர் ஆராய்ச்சியாளர்கள்.அதுபோல, ஜதிங்கா கிராமத்திலும் ஒரு ஆச்சரியம் காணப்படுகிறது.
அஸ்ஸாமில் உள்ள டிமா ஹசாவோ மாவட்டத்திலுள்ள சிறிய பழங்குடி கிராமம்தான் ஜதிங்கா.. அசாம் ஹஃப்லாங்கிலிருந்து கிட்டத்தட்ட 9 கிமீ தூரத்தில் இந்த ஜதிங்கா கிராமம் அமைந்துள்ளது.. அதாவது, கவுகாத்தியில் இருந்து 310 கிமீ தொலைவில் சென்று, ஹஃப்லாங்கில் இருந்து, வாகனங்கள் மூலம் இந்த கிராமத்துக்கு செல்லலாம்.
ஜதிங்கா மர்ம கிராமம்
இந்த கிராமத்தில்தான், பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன.. இப்படி தற்கொலை செய்து கொள்வதற்காகவே, இந்த கிராமத்துக்கு பறவைகள் வருகின்றனவாம்.. எனவே இதனை ஜதிங்கா பறவை என்றே சொல்கிறார்கள்.
வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பறவைகளின் தற்கொலை செய்துகொள்கின்றன.. அதிலும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை காலகட்டத்தில் மட்டுமே இந்த தற்கொலைகள் நடக்கின்றன.. அதிலும் சரியாக மாலை 6 மணி 10முதல் மணி வரை மட்டுமே இந்த பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றனவாம்.. அதிலும், அந்த கிராமத்தின் குறிப்பிட்ட 1.5 கிமீ வட்டத்திற்குள் மட்டுமே தற்கொலைகளை செய்து கொள்கின்றன.
புரியாத மர்மங்கள்
இந்த பறவைகள் இங்கு ஏன் வருகின்றன? ஏன் தற்கொலை செய்து கொள்கின்றன? என்றே தெரியவில்லை.. இது ஒரு புரியாத மர்மமாகவே உள்ளதாக பறவைகள் வல்லுநர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை சொல்கிறார்கள்..எனினும் பல கற்பனை கதைகளும், யூகங்களும் வட்டமடித்து வருகின்றன..
யாரோ செய்த சதி என்றும், தீய சக்திதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.. அது பழங்குடி கிராமம் என்பதால், மூங்கில் கம்புகளும் நிறைந்துள்ளன.. எனவே இவைகளில் மோதியும் பறவைகள் இறக்கலாம் என்கிறார்கள்..
இயற்கை சீற்றம் காரணமா
இயற்கை அம்சங்களுடன் நிறைந்த கிராமமாக ஜதிங்கா இருந்தாலும், கடுமையான குளிர், பனி, நதி, வெள்ளப்பெருக்குகளும் உள்ளன. இந்த குளிரும், பனிமூட்டமும் தாங்க முடியாமல் பறவைகள் மரணமடைவதாக சொல்கிறார்கள். இந்த குளிர் காலகட்டத்தில், நிலத்தடி நீரில் மாறும் காந்தப் பண்புகள், பறவைகளின் உடலுக்குள் பாய்ந்து, அதன் இயக்கங்களைப் பாதித்து விடுகின்றனவாம்.
இதனால் பறவைகளின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி அவற்றைத் தற்கொலை செய்யும் எண்ணத்திற்குத் தூண்டுகின்றன. இதுவே பறவைகளின் தற்கொலைக்குக் காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விளக்கு வெளிச்சம் காரணமா
அந்த கிராமத்தில் பலத்த காற்று வீசுவதால் பறவைகளின் கூடுகள் சின்னாபின்னமாகி விடுகின்றன. அதுபோன்ற தருணத்தில் பறவைகள் தங்குவதற்கு இடமின்றி அலைமோதுகின்றன.
அப்போது அங்குள்ள பழங்குடியின மக்கள் இன்னொரு பகுதியில் ஒளி ஏற்படுத்துகிறார்களாம்.. இந்த ஒளி கிடைக்கப்பெற்றதும் பறவைகள் அனைத்தும் அதனை நோக்கி வேகமாக இடம் பெயரும். அந்த நேரத்தில் அந்தப் பழங்குடியின மக்கள் நீளமான மூங்கில் கம்புகளைக் கொண்டு பறவைகளை அடித்துக் கொல்வதாகவும் சொல்லப்படுகிறது.
வாட்ச் டவர்
இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் உறுதியான காரணங்கள் இதுவரை தெரியவில்லையாம்.. பறவைள் மரணமடைவதை கண்காணிக்க அங்கு "வாட்ச் டவர்" ஒன்றை அம்மாநில அரசு அமைத்திருக்கிறதாம்.. அப்போதுகூட, பறவை களின் தற்கொலையைத் தடுக்கவே முடியவில்லை என்கிறார்கள்.
ஆனால், உண்மையிலேயே அங்கு என்ன நடக்கிறது? பறவைகள்தானாகவே தற்கொலை செய்கின்றனவா? அல்லது கொல்லப்படுகின்றவா? அல்லது இயற்கை மரணமா? தெரியவில்லை.. கற்பனைகள் மட்டும் வலம்வந்தவாறே உள்ளன.












Click it and Unblock the Notifications