கணினி சர்வர் ரொம்ப மோசம்! சுத்திக்கிட்டே இருந்தால் எப்படி பயிர் காப்பீடு செய்ய முடியும்? -ஜவாஹிருல்லா
சென்னை: பயிர் காப்பீடு செய்வதற்கான கணினி சர்வர் மிகவும் சுணக்கமாக இருப்பதால் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இனி வரும் காலங்களில் காப்பீடு விஷயத்தில் அரசு உரியக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

சம்பா, தாளடி பருவம்: ''சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காவிரியில் நீர் வரத்து இல்லாததாலும், பருவமழை பொழிவு போதுமான அளவுக்கு இல்லாத காரணத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளைத் தாமதமாகத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ''
கணினி சர்வர் சுணக்கம்: ''மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், பெரும்பாலான இணையச் சேவை மையங்களில் காப்பீடு செய்வதற்கான கணினி சர்வர் சுணக்கமாக வேலை செய்வதாலும் அரசு அறிவித்துள்ள நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறுகிய கால அவகாசமாக உள்ளது.
எனவே விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''
காப்பீடு விஷயத்தில் கவனம்: ''மேலும், கடந்த சில ஆண்டுகளாக சம்பா பருவத்தில் காப்பீடு செய்த விவசாய நிலங்களுக்குப் பாதிப்பின் அடிப்படையில் முறையாகக் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்கிற குறை விவசாயிகளிடையே இருப்பதைக் காண முடிகிறது. இது போன்ற குறைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க, காப்பீடு விஷயத்தில் அரசு உரியக் கவனம் செலுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.''
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications