ஜெர்மனியில் தமிழ் இருக்கைக்கு ஆபத்து! தமிழக அரசு தான் காக்க வேண்டும்! ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
சென்னை: ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில், நிதிச்சுமை காரணமாக தமிழ் பிரிவு மூடப்படும் ஆபத்தில் இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தமிழ் ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தமிழக அரசு தலையிட்டு இதனை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கொலோன் பல்கலைக்கழகம்
ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் சேர்க்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் 50 ஆயிரம் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகளும் இருப்பதாகத் தெரிகிறது.
நிதிச்சுமை காரணமாக 2020ல் இந்த பிரிவு மூடும் சூழ்நிலை உருவானது.

தமிழ் ஆர்வலர்கள்
இதனை மனிதநேய மக்கள் கட்சி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாலும், வெளிநாட்டு வாழ் தமிழ் ஆர்வலர்களின் உதவியாலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அளித்த 1.25 கோடி ரூபாய் வழங்கி பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு காப்பாற்றப்பட்டது. தற்போது மீண்டும் நிதிச்சுமை காரணமாகத் தமிழ் பிரிவு மூடப்படும் ஆபத்தில் இருப்பதாகப் பேராசிரியர் ஸ்வென் கூறியிருப்பதாக தமிழ் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

பெரும் கவலை
இது தமிழ் ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பல்கலைக்கழகத்தின் இதர துறைகளுடன் இணைந்து தமிழையும் அடிப்படையாக்கி ஒரு ஆய்வு நிறுவனத்தை அமைக்க அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

தமிழ் பிரிவைக் காக்க
எனவே, தமிழ் பிரிவைக் காப்பதற்கு ஒரு நபரை நியமிப்பதுடன் போதிய நிதி உதவியையும் வழங்கி அந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையை அமைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications