கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியம்தான்.. ஆனால்.. ஜவாஹிருல்லா சொல்வதை பாருங்க!
கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கலாம், ஆனால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படக் கூடாது- ஜவாஹிருல்லா
கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படக் கூடாது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய சேவையை பாராட்டி மெரினா கடற்கரையில் ரூ 80 கோடியில் நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பலர் இந்த சின்னத்தை கடலில் வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்றார்கள்.
மேலும் இந்த நினைவுச் சின்னத்தை பார்க்க வரும் மக்கள் கடலுக்குள் பிளாஸ்டிக் கவர்களை போடுவார்கள், இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் இனப்பெருக்கம் நடைபெறாமல் போகும். பவள பாறைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

களேபரம்
அந்த கருத்து தெரிவித்த இடத்தில் ஒரே களேபரம் நடந்தது. எதிர் கருத்து தெரிவிப்போரை ஆளும் கட்சியினர் பேச விடாமல் தடுத்து கூச்சலிட்டனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கட்டும். அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் கடலுக்குள் வைப்பதைதான் வேண்டாம் என்கிறோம்.

அண்ணா அறிவாயலம்
தேவைப்பட்டால் அண்ணா அறிவாலயத்தில் வைக்கட்டும். இல்லாவிட்டால் நினைவிடத்தில் வைக்கட்டும். இத்தனை எதிர்ப்பையும் மீறி பேனாவுக்கு சிலை வைத்தால் அதை உடைப்பேன் என சீமான் தெரிவித்திருந்தார். இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் பேனா சிலை குறித்து கூட்டணி கட்சியில் ஒன்றாக மனிதநேய மக்கள் கட்சி ஒரு கருத்தை தெரிவித்துள்ளது.

15 ஆம் ஆண்டு விழா
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி தெற்கு மந்தை தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பள்ளப்பட்டி நகர்மன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மற்றும் கட்சியின் கொடியேற்ற விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் நடப்பு நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கான நிதி திட்டங்கள் 34 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மாணவர்கள்
சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கடந்த நிதியாண்டில் 365 கோடி தரப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் 44 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கல்வியில் பின் தங்கியுள்ள சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித் தொகை விதியை குறைப்பது பாஜக அரசின் சிறுபான்மை விரோத போக்கை காட்டுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பது தேவையான ஒன்று. ஆனால் அதே நேரம் சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் பேனா நினைவு சின்னத்தை அமைக்க வேண்டும்.

குமரி முதல் காஷ்மீர் வரை
குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி சென்ற இந்திய ஒற்றுமை யாத்திரை இந்திய அரசியல் வரலாற்றில் புதுவையானது. இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் இப்படி ஒரு யாத்திரையை நடத்தியதே இல்லை. இது ஒற்றுமைக்கான யாத்திரையாகும். எதிர்க்கட்சியினர் அனழைவரும் ஓரணியில் இணைந்தால் நிச்சயமாக பாஜகவை வீழ்த்த முடியும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications