சங்கரய்யாவுக்கு ஆளுநர் ரவி செய்தது மிகப் பெரும் துரோகம்! சர்வாதிகார போக்கு! ஜவாஹிருல்லா பாய்ச்சல்!
சென்னை: சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஓப்புதல் அளிக்க மறுத்தது ஒரு பெரும் துரோகம் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சாடியுள்ளார்.
சங்கரய்யாவின் மரணம் இடது சாரிகளுக்கு மட்டுமின்றி அனைத்துத் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு எனக் கூறியுள்ளார். இது குறித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;

முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளருமான தோழர் என் சங்கரய்யா அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். விடுதலைப் போராட்ட வீரர், மாணவர் தலைவர், தொழிற்சங்கவாதி. பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையாகத் தோழர் சங்கரய்யா திகழ்ந்தார்.
விடுதலைக்கு முன்பு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும் விடுதலைக்குப் பிறகு மக்கள் நலனுக்காக நடைபெற்ற போராட்டங்களிலும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். சுயநலமறுப்பும் பொதுநலப் பொறுப்பும் கொண்ட தொழர் சங்கரய்யா 8 ஆண்டு சிறைவாழ்வு 5 ஆண்டு தலைமறைவு வாழ்வு ஆகியவற்றை இன்முகத்தோடு ஏற்றவர்.
1941 பிப்ரவரி 28ம் தேதி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மாணவர் தலைவராகக் கலந்து கொண்டவர் சங்கரய்யா. இறுதித் தேர்வுக்கு 15 நாட்கள் இருந்த நிலையில், சங்கரய்யா கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டதால் அவரால் பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.
இதைக் கவனத்தில் கொண்டு தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றம் தோழர் சங்கரய்யா அவர்களுக்குக் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க முன் வந்தது.
ஆனால் தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் சர்வாதிகாரமாகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஓப்புதல் அளிக்க மறுத்தது ஒரு பெரும் துரோகமாகும். திமுக அரசு நிறுவிய தகைசால் தமிழர் விருது முதன் முதலாக தோழர் சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது பாராட்டிற்குரியது.
தோழர் சங்கரய்யா மரணம் இடது சாரிகளுக்கு மட்டுமின்றி அனைத்துத் தமிழக மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் இயக்கத்தினர் மற்றும் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications