சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் வயது முதிர்வு காரணமாக காலமானார். ஜெய்பாய் மறைவுக்கு தமிழஞறிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. தமிழறிஞரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் பகுதியில் வசித்து வருகிறார். சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ளார். ரஜினியின் சிவாஜி தி பாஸ் படத்திலும் நடித்திருப்பார். மேலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார். இவரது மனைவி ஜெயபாய். இவர்களுக்கு தியாகமூர்த்தி என்ற மகன் மற்றும் விமலா என்ற மகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே ஜெய்பாய் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இதேபோன்று அரசியல் கட்சியினர், பிரமுகர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஜெய்பாய் மறைவுக்கு தமிழஞறிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் துணைவியார் திருமதி. ஜெயபாய் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். உற்ற துணையான வாழ்விணையரை இழந்து தவிக்கும் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். நேற்று தத்தனேரியில் ஜெயபாய் இறுதி சடங்குகள் நடந்தது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications