இரண்டு அண்ணன்களும் டீ சாப்பிட வந்தால் பிரச்சினையை முடிச்சி விட்ரலாம்- ஜெயக்குமார் கலகல
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு அண்ணன்களும் எங்கள் வீட்டுக்கு டீ சாப்பிட வந்தால் பிரச்சினையை முடித்து விடலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலகலப்பாக கூறினார்.
Recommended Video
கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேசப்பட்டதாகவும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத் தலைமை தேவை என கருதுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
அன்று முதல் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை பெரும் புயலை கிளப்பி வருகிறது. கடந்த 7 தினங்களாக இரு தலைமைகளும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஒற்றைத் தலைமை
இதுகுறித்து ஓபிஎஸ் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து தனக்கு இரட்டை தலைமையே தொடர வேண்டும். ஒற்றைத் தலைமையை நானோ எடப்பாடி பழனிச்சாமியோ விரும்பவில்லை. எனது நிலைப்பாட்டை நான் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் ஒற்றைத் தலைமை வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமிதான் சொல்ல வேண்டும் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை சொல்லிவிட்டார். ஆனால் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவே இல்லையே ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நான் வாய் திறக்கிறேனே
அதற்கு ஜெயக்குமாரோ நான் தான் வாய் திறக்கிறேனே, பிறகு அவர் எதுக்கு திறக்கணும் என கேட்டார். 7 நாட்களாக ஒற்றைத் தலைமை குறித்த ஆலோசனைகளை இரு தலைமைகளும் தனித்தனியே மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

கலகலப்பு
அதற்கு ஜெயக்குமாரோ, நான் சிறை சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது என்னை அண்ணன்கள் எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் வீட்டுக்கு வந்து சந்தித்தார்கள். அது போல் இரு அண்ணன்களும் என் வீட்டுக்கு டீ சாப்பிட வந்தால் பிரச்சினையை பேசி முடித்துவிடலாம் என கலகலப்பாக சொன்னார்.












Click it and Unblock the Notifications