கண்ணி வெடியில் காலை வைத்த விஜய்.. இனி எடுத்தாலும் வெடிக்கும்.. விட்டாலும் வெடிக்கும்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் இனி என்ன நடக்கும்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்ன மாதிரியான சிக்கலில் மாட்டி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் பாரதி தம்பி விளக்கி உள்ளார்.
பாரதி தம்பி செய்துள்ள போஸ்டில், தமிழ்நாட்டு பிராமணர்கள் எப்படியாவது தவெக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும்; திமுக-வை ஒழிக்க இது மிகச் சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர். இந்தமுறை பிராமணர்கள் சிந்தாமல், சிதறாமல் தங்கள் வாக்கை தவெக-வுக்கு செலுத்தியுள்ளனர். ஆனால் துயரம் என்னவென்றால் தவெக ஆட்சி அமைந்துவிடவே கூடாது என திமுக-வை விட அதிக தீவிரம் காட்டி வருகிறது பாஜக.

இதுவரை காலமும், தமிழ்நாட்டில் திமுக Vs அதிமுக என நிலைமை இருந்தது. அதிமுக பலவீனப்பட்டு நிற்கும் சூழலில் நாம கடையை திறக்கலாம்னு பார்த்தா, திடீர்னு இவ்ளோ பவர்ஃபுல் போர்ஸா தவெக வந்து நிற்குதே... இவங்களை ஆட்சி அமைக்க விட்டுட்டா இனிமே களம் தவெக Vs திமுக என மாறிவிடுமே.. அப்புறம் எப்போதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்றுவது என்பது அவர்கள் கவலை. போதாக்குறைக்கு காங்கிரஸ் வேறு அந்தப் பக்கம் நிற்கிறது. அது அடுத்து வரும் தேர்தலில் தென்னிந்தியா எங்கும் காங்கிரஸுக்கு புத்தெழுச்சியை தந்துவிடும் என்பதால் கூடுதலாக பயப்படுகிறார்கள். அதனால்தான் எதை செய்தாவது தவெக ஆட்சி அமையவிடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக அவர்கள் தரப்பில் திமுக - அதிமுக கூட்டணியை கூட initiate செய்திருக்க கூடும். அது கை கூடவில்லை என்றதும், இப்போது தினகரனை கையில் எடுத்துள்ளனர்.
அர்னாப் கோஸ்வாமில்கு ஆளுனர் அளித்துள்ள பேட்டியில் ஆளுனர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மாநிலம் நகர்வதை அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இதற்கு தினகரனை ஒரு பகடைக் காயாக பயன்படுத்த தொடங்கியுள்ளது பாஜக.
நேற்று மாலை வாக்கில், விசிக தரப்பில் முதல்வர் அல்லது துணை முதல்வர் என நிபந்தனைகள் விதித்து அதில் தவெக தரப்பு வெக்ஸ் ஆகியிருந்த சூழலில், ஆல்ரெடி அவர்கள் விரித்திருந்த கண்ணிவலையில் விழுந்தார் அமமுக எம்.எல்.ஏ காமராஜ். அதாவது தவெக தரப்பு அப்படி நினைத்தது. ஆக்ஸ்வலாக அது அவர்களுக்கு விரிக்கப்பட்ட வலை. எதை தின்றால் பித்தம் தீரும் என்ற உச்சகட்ட பரபரப்பில் இருந்த அவர்கள், காமராஜ் தரப்பில் இருந்து சம்மதம் வந்ததும் தங்கள் ராஜ தந்திரம் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்தனர். உடனே அவரை வரவழைத்து ஆதரவு கடிதம் வாங்கிவிட்டனர்.
தினகரன் எங்க எம்.எல்.ஏவை காணோம்
அதன் பின்னர் தினகரன் எங்க எம்.எல்.ஏவை காணோம், தவெக குதிரைபேரம் நடத்துகிறது என பேட்டிக்கொடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் 'காணாமல் போன எம்.எல்.ஏ'வுடன் ஆளுநரை சந்தித்து... 'தவெக ஊழல் செய்கிறது' என பேட்டிக் கொடுத்தார். இதெல்லாம் FIR போடும்போது குறிப்பிட்ட செக்ஷனில் வழக்குப் போடுவதற்காகவே, 'கொலை செய்யும் நோக்கத்தோடு என்னை தாக்கினார்' என்றெல்லாம் எழுதுவார்களே... அதைப் போன்றது. இதை இன்னும் உறுதிபடுத்துவதைப் போல, இதுவரை தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள CPM, CPI and VCK போன்ற கட்சிகளுடன் குதிரை பேரம் நடந்ததா என விசாரிக்கச் சொல்லி ஆளுனரிடம் கடிதம் கொடுக்கப் போவதாக தினகரன் பேட்டி அளித்துள்ளார். ஆகவே தினகரன் மூலமாக பிரச்னையை கிளப்பி, ஆளுனர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சியை நோக்கி நகர்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் எப்படியாவது தவெக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும்; திமுக-வை ஒழிக்க இது மிகச் சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர். இந்தமுறை பார்ப்பனர்கள் சிந்தாமல், சிதறாமல் தங்கள் வாக்கை தவெக-வுக்கு செலுத்தியுள்ளனர். ஆனால் துயரம் என்னவென்றால் தவெக ஆட்சி அமைந்துவிடவே கூடாது என…
— Barathi Thambi (@barathithambi) May 9, 2026
தினகரன் பேட்டி
அமமுக- MLA- எங்களை சந்தித்து கையெழுத்துப் போட்டார் என்ற தவெக தரப்பு வீடியோ-வுக்கு பெரிதாக ஒன்றும் மதிப்பு இருக்காது. எதையாவது பொய் சொல்லி சமாளிப்பார்கள். AI video என்பார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கடைசியில் ஆளுனர் எந்த தரப்பை நம்ப வேண்டும் என்பதுதானே விசயம்?
பற்றாக்குறைக்கு NDA தரப்பில் இருந்து அமமுக-வை இழுத்திருப்பதன் மூலம், கம்யூனிஸ்டுகள் மற்றும் VCK தரப்புக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது இப்போது நம் கண் முன்னே இருக்கும் வாய்ப்புகள் மூன்று. ஒன்று ஆளுனர் ஆட்சி ஜனாதிபதி ஆட்சி. இரண்டு, பாஜக, அதிமுக தரப்பின் ஆதரவை பெற்றுத்தரும். அதைக்கொண்டு, அவர்கள் சொல்லும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு தவெக ஆட்சி அமைக்க வேண்டும். மூன்று விசிக தரப்பின் நிபந்தணைகளை ஏற்று ஆட்சி அமைப்பது.
இதைத்தவிர மறுதேர்தல் போன்ற ஆப்ஷனுக்கு எந்த இடமும் இல்லை, என்று பாரதி தம்பி விளக்கி உள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications