தொக்காக மாட்டிய ஓபிஎஸ்.. “பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு”.. புயல் வேகத்தில் வந்த ஜெயக்குமார்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் - சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், "பூனைக்குட்டி வெளியே வந்தது" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துப் பேசினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 49-வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி மும்பை அணியை சென்னையில் வென்றுள்ளது.
இந்த போட்டியை காண தனுஷ், அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் மேட்ச் பார்க்க வந்திருந்தனர். புதிதாகத் திறப்பட்ட கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து ஓபிஎஸ் போட்டியை கண்டு களித்தார்.

இந்தப் போட்டிக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசினார். சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு, இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்ததோடு, அமர்ந்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன.
அதிமுகவுக்கு எதிராக திமுக உடன் கூட்டு சேர்ந்து ஓபிஎஸ் செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்தச் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "பூனைக்குட்டி வெளியே வந்தது" எனக் கூறி ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்துப் பேசியதை அப்போது ஈபிஎஸ் தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி ஓபிஎஸ் சட்டசபையில் புகழ்ந்து பேசியதையும் எடப்பாடி தரப்பினர் விமர்சித்தனர். இந்நிலையில் சபரீசன் உடனான ஓபிஎஸ் சந்திப்பு எடப்பாடி தரப்பினரின் வாய்க்கு அவல் பொரியாக அமைந்துள்ளது.
பூனைக்குட்டி வெளியே வந்தது...
— DJayakumar (@offiofDJ) May 6, 2023
*சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு..* pic.twitter.com/MjDhDPKkpR
-
நாடு முழுக்க கேஸ்.. அந்த ஒரு பேச்சுக்காக விடாது துரத்தும் கேஸ்.. உதயநிதி பிரமாண பத்திர சீக்ரெட்! -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications