இப்பவும் ஏமாற்றம்தான்? கண்டுகொள்ளாத எடப்பாடி.. தாழ்ந்து போயிட்டாரு! விட்டுத்தராமல் பேசிய ஜெயக்குமார்
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இன்று திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக்கு வேறு சிலரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் "மீண்டும்" திண்டுக்கல் சீனிவாசனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
மிகப்பெரிய கலவரத்திற்கும், மோதலுக்கும் இடையில் அதிமுக பொதுக்குழு ஒருவழியாக இன்று நடந்து முடிந்தது. ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்த நிலையில், பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் அதிமுக பொதுக்குழு இன்றுநடைபெற்றது.

பொதுக்குழு
இந்த அதிமுக பொதுக்குழு எதிர்பார்த்த பல சம்பவங்கள் நடைபெற்றன. எதிர்பார்க்காத சில சம்பவங்களும் கூட நடைபெற்றன. முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தது நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் வைத்தியலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

நீக்கம்
அதேபோல் , மனோஜ் பாண்டியன், பிரபாகர் ஆகியோரும் நீக்கப்பட்டு உள்ளனர். அதோடு எதிர்பார்த்தபடியே அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் இன்று தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்தார். அதிமுகவின் பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளர் ஆகியுள்ளார்.

எதிர்பார்ப்பு
அதிமுகவின் பொருளாளர் பதவிக்கு நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டன. முக்கியமாக ஜெயக்குமார் பெயரும் இந்த லிஸ்டில் அடிபட்டது. ஆனால் ஜெயக்குமாருக்கு பதவி கொடுக்கப்படாமல் திண்டுக்கல் சீனிவாசன் பதவியை பெற்றுள்ளார். முன்னதாகவே ஜெயக்குமாருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார் அப்போதே வாய்ப்பை இழந்தார். இதனால் அவை தலைவர் பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு பதிலாக ஜெயக்குமார் நிரந்தர அவைத்தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த பொதுக்குழுவில் திடீரென தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவர் ஆனார். இது பெரிய சர்ச்சையானாது.

பொருளாளர்
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியாவது இவருக்கு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் ஜெயக்குமாருக்கு சென்றுள்ளது. இப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி காலியாகிறது. அதேபோல் தலைமை கழக செயலாளர் பதவி காலியாகிறது. இதனால் இரண்டில் ஒரு பதவி மட்டுமே மீதம் உள்ளது. இரண்டிலும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி எஸ்பி வேலுமணிக்கு அளிக்கப்படும் என்கிறார்கள்.

தலைமை கழக செயலாளர்
தலைமை கழக செயலாளர் பதவி சிவி சண்முகத்திற்கு அல்லது ஜெயக்குமாருக்கு போகலாம். தொடர்ந்து பல்வேறு பதவிகளை எதிர்பார்த்த ஜெயக்குமார் இன்று பொருளாளர் பதவியை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆனால் என்னதான் எடப்பாடி தரப்பு இவருக்கு பதவி கொடுக்காவிட்டாலும், இன்றும் எடப்பாடிக்கு ஆதரவாக அவரை விட்டுக்கொடுக்காமல் ஜெயக்குமார் பேசினார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் இன்று மிகவும் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஜெயக்குமார்
அவரது செயலை யாரும் ஏற்க மாட்டார்கள். எம்ஜி ஆர் உருவாக்கிய தலைமை அலுவலகத்தில் தடாலடியாக நுழைந்து ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார். அவர் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார்.முன்னதாகவே, சமூக விரோதிகள் நுழைவார்கள், பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கூறியுள்ளோம். ஆனால், திமுக, ஓபிஎஸ்ஸை கைக்குள் போட்டுகொண்டு இந்த வேலையை செய்துள்ளது. திமுகவின் உள்கட்சி விவகாரத்தில் அதிமுக தலையிடவில்லை ஆனால் திமுகவுடன் ஓபிசி கைகோர்த்து உள்ளது எத்தனை ஸ்டாலின் வந்தாலும், ஓபிஎஸ் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications