ஆத்தாடி.. விட்டா அண்ணாவுக்கே ஆலோசனை சொன்னேன்னு சொல்வார் சசிகலா.. கலாய்க்கும் ஜெயக்குமார்!
சென்னை: கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார் என சசிகலாவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சசிகலா கடந்த சில மாதங்களாக அதிமுக, அமமுக நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். இவர் அவர்களுடன் பேசும் ஆடியோ ரிலீஸாகி அதிமுகவில் பல சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பெரும்பாலான ஆடியோக்களில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கொங்கு மண்டல நிர்வாகிகளை கண்டித்து பேசி வருகிறார். நேற்றைய தினம் வெளியான ஆடியோவில் தான் தமிழக மக்களுக்காக சிறையிலிருந்தபடியே பூஜை செய்தேன்.

கொரோனா
தமிழக மக்களுக்கு கொரோனா பாதிக்கக் கூடாது என எத்தனையோ விரதங்களை பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது மேற்கொண்டதாகவும் தொண்டரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

சசிகலா
இதுதான் பர்ஸ்ட் கிளாஸ் ஆடியோ என்கிறார்கள். தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமியுடன் சசிகலா உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா மட்டுமில்லை, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் தான் ஆலோசனைகளை கூறி இருப்பதாகவும் அதிமுக தொடர்பாக தன்னிடம் எம்ஜிஆர் கருத்துகளை கேட்பார் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

அரசியல் முதிர்ச்சி
மேலும் தான் இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டதால் தனது ஆலோசனையை எம்ஜிஆர் கேட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விஷயமெல்லாம் நிறைய பேருக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல எம்ஜிஆர் பேசும் போதெல்லாம் எப்படி பேச வேண்டும், எப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் சசிகலா அட்வைஸ் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆருக்கும் ஆலோசனைகள்
எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக சசிகலா கூறியதை கேட்ட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கொந்தளித்து போய் உள்ளார்கள். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் எம்ஜிஆருக்கே ஆலோசனை சொல்லியதாக சசிகலா கூறியது காதில் பூ சுற்றுகிற விஷயம். எம்ஜிஆர் அறிவும், ஆற்றலும் , ஆளுமைத் திறமையும் புத்திக்கூர்மையும் உள்ளவர். அவருக்கு இவர் ஆலோசனை சொல்லியதாக சொன்னால் இதை விட ஒரு நகைச்சுவை உலகில் வேறு இருக்காது. அவர் இதுவரை வீசிய அஸ்திரங்கள் பயனற்று போனதால் சசிகலா இந்தளவு வந்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை சொன்னதாக கூட சொல்வார்.

ஜெயக்குமார் காட்டம்
கேட்பவர்கள் கேட்டால் கேப்பையில் நெய் வடிகிறது என்பதை போன்று தமிழகத்து மக்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கட்சி எடுத்த முடிவில் அனைவரும் உறுதியாக உள்ளோம். கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்தவிதமாக சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் உயிருடன் இல்லை. இல்லாத தலைவர்களுக்கு நான் ஆலோசனை சொன்னதாக சொன்னால் நிச்சயமாக நகைப்புதான் வருகிறது. சோதனைகளை தாங்கி சரித்திரம் படைத்த இயக்கம் இது. இந்த இயக்கத்தை யாரும் அழிக்கவும் முடியாது, யாராலும் கைப்பற்றவும் முடியாது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications