சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போறதுன்னா போய்ட்டே இருக்கணும்.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வைங்க.. தேமுதிகவுக்கு ஜெயக்குமார் பொளேர்!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துக் கட்ட முடியும். ஆனால் கூட்டணி தர்மத்திற்காக அமைதிகாக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: கீழ்த்தரமான அரசியல் செய்யக் கூடாது... தேமுதிகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

    10 நாட்களாக நீண்ட இழுபறிக்கு பிறகு கேட்டது கிடைக்கவில்லை என கூறி அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது. இதை தொண்டர்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்த முடிவு குறித்து தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ் கூறுகையில் தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி. அதிமுக இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கும். பாமகவினர் சிலீப்பர் செல்லாக கே பி முனுசாமி அதிமுகவில் செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

    போனா போகட்டும்.. டேட்டாவை நீட்டி இபிஎஸ் வைத்த கிடுக்குபிடி செக்.. வெளியேறிய தேமுதிக.. நடந்தது என்ன? போனா போகட்டும்.. டேட்டாவை நீட்டி இபிஎஸ் வைத்த கிடுக்குபிடி செக்.. வெளியேறிய தேமுதிக.. நடந்தது என்ன?

    கீழ்த்தரமான அரசியல்

    கீழ்த்தரமான அரசியல்

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தேமுதிக துரதிருஷ்டவசமான முடிவை எடுத்துள்ளார்கள். எங்களை பொருத்தமட்டில் ஒரு கீழ்த்தரமான அரசியலை நாங்கள் என்றைக்குமே செய்ததில்லை. நேற்று வரை நண்பர்களாக இருந்தோம். பிடிக்கவில்லை என்றால் சந்தோஷமாக கைக்குலுக்கிவிட்டு செல்ல வேண்டும். எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லிட வேண்டியதுதான். அந்த பண்பாடு இல்லை.

    சேற்றை வாரி வீசக் கூடாது

    சேற்றை வாரி வீசக் கூடாது

    பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு கட்சி மீது சேற்றை வாரி வீசக் கூடாது. கூட்டணியில் இருந்த போதும் எல்கே சுதீஷ் போன்றோர் எத்தனை கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தார்கள். அதையெல்லாம் கூட்டணி தர்மத்திற்காக நாங்கள் பொறுத்துக் கொண்டு சென்றோம். என்னால பேச முடியாதா, என்னால வாங்கு வாங்குனு வாங்க முடியாதா, வெளுத்து கட்டிடுவேன் நானு. கூட்டணி தர்மத்திற்காகத்தான் வாய் மூடிக் கொண்டு இருந்தோம்.

    உடன்பாடு

    உடன்பாடு

    பேச்சுவார்த்தை நடத்தினோம், உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் டீசன்ட்டாக போய்விட வேண்டும். அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு விமர்சனங்களை ஏற்க முடியாது. இதற்காக நாங்கள் பதிலடி தந்தால் பாதிப்பு இவர்களுக்குத்தான். தேமுதிகவை பொருத்தவரை அங்கீகாரத்தையே ஜெயலலிதாதான் கொடுத்தார். அந்த நன்றியை மறந்துவிட்டு பேசக் கூடாது.

    சுதீஷ்

    சுதீஷ்

    கோபத்தின், வெறுப்பின் உச்சக்கட்டத்தில் சுதீஷ் பேசுகிறார். நிதானத்தை இழக்கக் கூடாது. ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டக் கூடாது. தேமுதிவின் எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தால் என்ன செய்ய முடியும்? எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தோற்பார் என்கிறாரே விஜய பிரபாகரன் பேசுவதை பார்த்தால் இவர்கள் எல்லாம் எப்போ ஜோதிடர்கள் ஆனார்கள்? என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

    English summary
    Minister Jayakumar says that we can also give suitable reply to DMDK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X