ஒன்றிணைவோம்..உதவி செய்வோம்..ஜெ.பிறந்தநாளில் மீண்டும் அழைப்பு விடுத்த சசிகலா
பாலில் கலந்த நீரை எவ்வாறு பிரிக்க முடியாதோ? அதுபோல தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா அவர்களுக்கு என்றைக்கும் அழிவே இல்லை.
சென்னை: ஜெயலலிதாவின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம் என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். அம்மா பிறந்த இந்நன்னாளில், ஏழை எளிய சாமானிய மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடுவோம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளினை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்களின் மனதில் நிற்பவர் யார்?' என்ற நம் புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப இன்றைக்கும் கோடானு கோடி தமிழக மக்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் நம் ஜெயலலிதா. பாலில் கலந்த நீரை எவ்வாறு பிரிக்க முடியாதோ? அதுபோல தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா அவர்களுக்கு என்றைக்கும் அழிவே இல்லை. அவர் உடலால் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக என்று ஏதாவது ஒரு ரூபத்தில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
அவருடைய எண்ணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். பெண்ணினத்தின் அடையாளமாக விளங்கிய சிங்கத்தலைவி, தங்கத்தாரகை, சமூக நீதி காத்த வீராங்கனை, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த இந்நன்னாளில், நம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அம்மா அவர்களின் பிறந்தநாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் எனஅனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications