Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லம்ம நாயுடு காலமானார்..! சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியவர்..!

Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய அதிகாரி நல்லம்ம நாயுடு (83) வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றியதால் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்தவர், ஓய்வுக்குப்பின் சென்னையில் வசித்து வந்த நிலையில் வயோதிகம் காரணமாக காலமானார். ஜெயலலிதா மறைந்த நிலையில் பின்னர் சசிகலா, சுதாகரன் இந்த வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனைப் பெற்றனர்.

Jayalalithaa Asset accumulation case Former Investigating Officer Nallamma Naidu has passed away

தமிழகத்தில் புகழ்ப்பெற்ற வழக்குகளில் ஒன்று சொத்துக்குவிப்பு வழக்கு . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடு தனது தனித்துவமான விசாரணையால் அவர்களுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தார். இவரது அயராத பணியின் காரணமாக ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Jayalalithaa Asset accumulation case Former Investigating Officer Nallamma Naidu has passed away

2001 ஆம் ஆண்டுக்குப்பின் ஓய்வுப்பெற்ற நல்லம்ம நாயுடு சென்னை பெரவள்ளூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். நள்ளிரவு இரவு சுமார் 02.00 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு 03.00 மணியளில் அரும்பாக்கத்தில் உள்ள பிரைம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

Jayalalithaa Asset accumulation case Former Investigating Officer Nallamma Naidu has passed away

அவரது உடல் தொழில்துறை இணை இயக்குனராக பதவி வகிக்கும் அவரது மூத்த மகன் இளங்கோவன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்குப்பின் அவரது உடல் இன்று 16.11.2021 மாலை சொந்த ஊரான தேனி மாவட்டம் சுப்பு நாயக்கன்பட்டிக்கு எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

1965 ஆம் ஆண்டு எஸ்.ஐ ஆக பணியில் இணைந்த நல்லம்ம நாயுடு படிப்படியாக பதவி உயர்வுப்பெற்று எஸ்.பியாக ஓய்வுப்பெற்றார். கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தார். நல்லம்ம நாயுடுவுக்கு விஜயலக்‌ஷ்மி என்கிற மனைவியும், இளங்கோவன், சரவணன் என இரண்டு மகன்களும் செல்வி, கனிமொழி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+