ஜெயலலிதா மரணத்தின் காரணம் இதுதான்.. ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்
சென்னை: ஜெயலலிதா மாரடைப்பு ஏற்பட்டு தான் இறந்தார், என அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக-வில் உள்ள பலரும் கருத்து கூறினர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
2017 செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர்கள், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என 154 பேரிடம் விசாரணை நடத்தியது இந்த ஆணையம்.

தடை
மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கியது.

அப்பல்லோ மருத்துவர்கள்
சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். இரண்டாவது நாளான இன்றும் அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை தொடர்ந்தது. இன்று அப்பல்லோ மருத்துவர்கள் மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர்.

மாரடைப்பு
மதன்குமாரிடம் நடைபெற்ற குறுக்குவிசாரணையில், ஜெயலலிதாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதும் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டோம் என அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications