”ஜெயலலிதாவின் வரி பாக்கியை சரியாக சொன்னால் செலுத்த தயார்”.. உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா தரப்பு பதில்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித்தொகை எவ்வளவு என்பது குறித்து சரியான தொகையை தெரிவித்தால், அதை செலுத்த தயாராக இருப்பதாக ஜெ. தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை வரும் ஜன.12-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாக்கியாக வைத்துள்ள ரூ.36.56 கோடி வருமான வரியை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை கடந்த ஜூலை 23 அன்று நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு தடை உத்தரவு பெற்றார். அதையடுத்து அந்த நோட்டீஸை திரும்பப் பெற்ற வருமான வரித்துறை ரூ. 13.69 கோடியை செலுத்தும்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் ஜெ.தீபக்கும் இணைந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நிலுவைத் தொகையில் தனது பங்குத்தொகையை தவணை முறையில் செலுத்தி வருவதாக ஜெ.தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், "ஏற்கெனவே ஜெயலலிதா வருமான வரி பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி எனக்கூறிய வருமான வரித்துறை, அதன்பிறகு ரூ.36 கோடி கட்ட வேண்டும் எனக்கூறியது. தற்போது ரூ.13.69 கோடி எனக் கூறுகிறது.
வருமான வரித்துறையின் இந்த கணக்கீடு முற்றிலும் தவறானது என்பது தான் எங்கள் தரப்பு வாதம். நிலுவை வரி தொடர்பாக தெளிவான எந்த விளக்கத்தையும் வருமான வரித்துறை தெரிவிக்கவில்லை. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருக்கிறோம்" என வாதம் வைத்தார்.
ஜெ.தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எல்.சுதர்சனம், "எங்களது பங்களிப்புத் தொகையை தவணை முறையில் செலுத்தி வருகிறோம்" என்றார். வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.பிரதாப், "தற்போது வருமான வரி பாக்கியாக ரூ.13.69 கோடி உள்ளது. இதில் தனது பங்குத் தொகையை தீபக் செலுத்தி வருவதால், தீபா செலுத்த மாட்டேன் எனக் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், யாரும் எந்த சிறப்பு சலுகையும் கோர முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, எவ்வளவு வரி பாக்கி செலுத்த வேண்டும் என கணக்கு விவரங்களை சரிபார்த்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, "மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு என்பது குறித்து விளக்கமான பதில் மனுவை வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications