ஆபரேஷன் தியேட்டரில் ஆர்த்தி! மயக்கம் போட்டு விழுந்த ஜெயம் ரவி! நெகிழ வைக்கும் பிளாஷ்பேக்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ஆர்த்தியின் முதல் குழந்தை ஆரவ் பிறந்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்த பிளாஷ்பேக்குகள் இணையதளத்தில் வலம் வருகின்றன.
ஜெயம் என்ற முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ரவி. இவர் எடிட்டர் மோகனின் மகன், இயக்குநர் ராஜாவின் தம்பி. தனது அண்ணனின் இயக்கத்தில் ரவி நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார்.

புதுமுக நாயகனாக ரவிக்கு உனக்கும் எனக்கும் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்கள் ஜெயம் ரவிக்கு சாக்லேட் பாய் என்ற இமேஜை கொடுத்து பெண் ரசிகர்களையும் குவிக்க செய்தது.
காமெடியன், ஆக்ஷன் ஹீரோவுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படம், ஜெயம் ரவிக்கு நல்லதொரு பெயரை கொடுத்தது. இந்த படத்தில் நடித்த போதுதான் தனது தாய், தந்தை, மனைவி, ஆகியோருடன் இணைந்து ஜெயம் ரவி பேட்டி கொடுத்தார்.
அப்போது ஆர்த்தி கூறுகையில் எங்களது முதல் மகன் ஆரவ் பிறந்த போது என்னுடன் இருக்க ரவி எத்தனையோ ப்ரீ பிளான் செய்தார். ஆனால் எனக்கு முன்கூட்டியே டெலிவரி செய்ய வேண்டிய தேவை எழுந்தது. இதனால் என்னுடன் அவர் இல்லை. இதனால் எனக்கு என்ன நடக்கிறது என்பதை என் அப்பா, ரவிக்கு போன் செய்து அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தார் என்றார்.
ஜெயம் ரவி பேசுகையில் இரண்டாவது குழந்தை அயான் பிறந்த போது ஆர்த்திக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய அழைத்து சென்றார்கள். நானும் அவருடன் இருக்க எனக்கு பிரத்யேக உடை கொடுத்தார்கள். நான் உள்ளே போன போது அங்கு மருத்துவர்கள் செய்வதை பார்த்துவிட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது.
பிறகு என் அம்மா என்னை எழுப்பி என்ன ஆனது என கேட்டுக் கொண்டிருந்த போது அயான் பிறந்துவிட்டான் என ஜெயம் ரவி தெரிவித்தார். எனவே இருவரும் அன்யோன்யமான தம்பதியாகவே இருந்தது தெரியவருகிறது. அப்படிப்பட்ட இவர்களுக்கு மத்தியில் விரிசல் எழ காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவி, நேர்றைய தினம் அவருடைய விவாகரத்து குறித்து அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே., நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications