சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜெயந்தி நியமனம்!.. அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வனத்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக உதயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் தற்போது வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டார்.

அடங்க மறுக்கும் கொரோனா.. 4 மாதங்களில் முதல் முறை! இந்தியாவில் 3 சதவீதத்தை தாண்டிய பாசிட்டிவ் விகிதம்அடங்க மறுக்கும் கொரோனா.. 4 மாதங்களில் முதல் முறை! இந்தியாவில் 3 சதவீதத்தை தாண்டிய பாசிட்டிவ் விகிதம்

இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி ஐஎஃப்எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை தீபக் பல்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெங்கடாசலம்

வெங்கடாசலம்

இதையடுத்து வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு 60 தொழில் நிறுவனங்களுக்கு தடை இல்லா சான்றிதழை அவசரமாக வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்

இதையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தற்காலிக புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டார். மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்த 24 மணி நேரத்தில், தலைமை செயலாளர் இறையன்பு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

தற்கொலை

தற்கொலை

வனத்துறை தொடர்பான ஆக்கப்பூர்வமான பணிகளில் அதிகம் கவனிக்கப்பட்டவர் சுப்ரியா சாகு என்பது குறிப்பிடத்தக்கது அதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உதயன் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி தலைமைச் செயலக காலனியில் உள்ள வீட்டில் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதிய நியமனங்கள்

புதிய நியமனங்கள்

கடந்த சில நாட்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜெயந்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அப்பதவியிலிருந்த உதயன் வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டார். இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி ஐஎஃப்எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை தீபக் பல்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
Jayanthi IFS appointed as Tamilnadu Pollution Control Board President.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X