ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு: 43 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்..தமிழகத்தில் விஸ்வாஜித் முதலிடம்
சென்னை: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 43 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர். தமிழகத்தில் விஸ்வாஜித் என்ற மாணவர் 100 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி,என்.ஐ.டி ஆகியவற்றில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இந்த தேர்வை என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும்.

கணிணி வாயிலாக நடத்தப்படும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்வை எழுத சுமார் 8 லட்சம் பேர் எழுதினார்கள். முதன்மை தேர்வுக்கான முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது.
அதன்பிறகு இந்த மாதம் 2-வது வாரத்தில் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீத மதிப்பெண்ணை 43 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். முதல் இடத்தை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிங்கராஜூ வெங்கட் கவுன்டினியாவும், அதற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கள்ளக்குரி சாய்நாத் ஸ்ரீமந்த், ராஜஸ்தானை சேர்ந்த இஷான் தேஷாங், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரதாப் சிங் ஆகியோர் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.கே.விஸ்வாஜித் என்ற மாணவரும் 100 சதவீத மதிப்பெண் பெற்று 24-வது இடத்தில் உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முதல் இடம் பெற்றவர் இவர்தான். இரண்டு முறை நடந்த தேர்வில் எதில் சிறந்த மதிப்பெண் பெறப்பட்டிருக்கிறதோ அதை மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வர்கள் www.nta.ac.in, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications