ரூ 2000 த்துடன் நகைக் கடைக்கு படையெடுப்பு.. டபுள் அதிர்ச்சி வைத்தியத்தால் மக்கள் அவதி
சென்னை: ரூ 2000 வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் அந்த நோட்டுகளை நகைக்கடைகளில் மாற்ற மக்கள் படையெடுத்த நிலையில் நகைக்கடைகளோ அதை வாங்க மறுத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ 500, ரூ 1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்த சமயத்தில் அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையடுத்து மக்கள் வங்கி வாயில்களில் காத்திருந்தனர்.

இதிவ் சிலர் மரணம் கூட அடைந்தனர். இந்த தினத்தை எதிர்க்கட்சிகள் கருப்பு தினம் என அழைத்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரூ 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
நாளை முதல் வங்கிகளில் ரூ 2000 நோட்டுகளை கொடுத்து உங்கள் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அந்த 2000 நோட்டுகளுக்கு பதில் வேறு ஒரு நோட்டை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ 20000 மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை மட்டுமே மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் ரூ 2000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுவாக ரூ 500, ரூ 2000 ஆகியவற்றுக்கு சில்லறை கொடுக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட ரூ 2000 வாங்கப்படாது என போர்டு வைத்துள்ளார்கள். அது போல் பேருந்துகளிலும் வாங்கப்படாது என சில போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்துள்ளன.
ஆம்னி பேருந்துகளிலும் ரூ 2000 வாங்கப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வங்கி வாசல்களில் கால் கசடுக்க நிற்பதற்கு பதிலாக நகைக்கடைகளில் ரூ 2000 த்தை கொடுத்து நகை வாங்கலாம் என முடிவு செய்து நகைக் கடைகளுக்கு சென்று ஆசை ஆசையாக நகைகள வாங்கிவிட்டு பில் போடும் போதுதான் தெரிகிறது ரூ 2000 நோட்டுகள் வாங்கப்படாது என்று!
இதனால் சிலர் நகைகளை கார்டு வாங்குகிறார்கள். சிலர் நகைக் கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். சில கடைகளில் ரூ.2000 நோட்டுகளை கொண்டு தங்கம் வாங்கினால் சில நகைக்கடைகளில் வழக்கமான விலையை விட 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக விலைக்கு தங்கத்தை விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூ 2000 செல்லாது என மத்திய அரசு அறிவித்தாலும் அறிவித்தது, அந்த நோட்டுகளை மாற்ற மக்கள் படாதபாடுபடுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications