நடிகை சீதா வீட்டில் நடந்த நகை திருட்டு.. விசாரணையில் இறங்கியது சென்னை போலீஸ்!
சென்னை: நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகை திருடு போனது தொடர்பாக நடிகை சீதா புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சீதாவின் வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடி உள்ளார்கள். எனவே காணாமல் போன எனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தரவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார் சீதா.
இந்த நிலையில், நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகையை திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான, பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான, 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சீதா. தனது முதல் படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சீதா.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சீதாவுக்கு, அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான சீதா, 80களில் ஏராளமான படங்களில் நடித்தார்.
பின்னர், நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சீதா. பத்து ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். அதைத்தொடர்ந்து எங்கும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த சீதா, சீரியல்களில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
"என்கிட்ட எவ்ளோ தங்க நகை இருக்கு பாருங்க!" ரீல்ஸ் போட்டு பந்தா காட்டிய பெண்! ஆட்டைய போட்ட திருடர்கள் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications