அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. பென்ஷன் பணம் லேட்டாகாது.. மத்திய அரசு உத்தரவு.. ஓய்வூதியதாரர்கள் நிம்மதி

Subscribe to Oneindia Tamil
சென்னை: பென்ஷன் தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஓய்வூதியம் வாங்கும் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளிக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். அமைச்சரின் இந்த உறுதியானது பென்ஷன் வாங்குவோருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கடந்த வருடம் திருத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது..
மத்திய அரசு நடவடிக்கை
இந்த புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்கள்..
இப்படி ஏராளமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தாலும், பென்ஷன் இன்றுவரை பலருக்கும் கிடைப்பதில்லை..
இந்த ஓய்வூதியத்தை நம்பியே பல குடும்பங்கள் உள்ள நிலையில், பல முதியோர் பணம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.. அப்படியே கிடைத்தாலும், பெரும்பாலானோருக்கு தாமதமாக கிடைக்கிறது.
ஓய்வூதிய தொகை
வயதான காலத்தில் இந்த ஓய்வூதியத்தை பெறுவதற்கு வங்கிகளுக்கு அலைய வேண்டியிருக்கிறது.. ஓய்வூதியம் தொடர்பான புகார்களை சரிசெய்ய பென்சன் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தாலும், பல நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாக கூறுகிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில்தான், ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.. 13-வது அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் டெல்லியில் நடைபெற்ற முகாமில் மத்திய அமைச்சர் உரையாற்றியதாவது:
குறைகள் தீர்ப்பு முகாம்
ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம். பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களை மையமாக வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரிக்கு இணங்க, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியதாரர்களின் கௌரவத்தை உறுதிசெய்ய சிறந்த நடவடிக்கை தேவை.
2017ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் இதுவரை நடைபெற்ற 12 பென்சன் குறைதீர்ப்பு முகாம்களில் 25,416 கோரிக்கைகள் பெறப்பட்டு, 18,157 கோரிக்கைகளுக்கு குறிப்பாக 71 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்பதால் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்காக அலைக்கழிக்கப்படக்கூடாது. ஓய்வூதியதாரர்களை அரசு துறைகளும், அலுவலர்களும் பயனாளிகளாகவும் நடத்தக்கூடாது. நிர்வாக குடும்பத்தின் மதிப்புமிகு உறுப்பினர்களாக நடத்த வேண்டும்.. நாட்டின் ஓய்வூதியதாரர்களின் கௌரவத்தை உறுதிசெய்ய நிர்வாக கூருணர்வும், திறனும் அவசியம் என்று உரையாற்றினார் அமைச்சர்.
பென்சன் தொகை
நாடு முழுவதிலுமிருந்து ஓய்வூதியதாரர்கள், அரசு அலுவலர்கள், துறை தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இதற்கு முன்பு நடத்தப்பட்ட 12 முகாம்களின் வெற்றிக்கதைகளின் தொகுப்பு நூல் ஒன்றையும் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
இதில், யசோதா தேவி என்பவர் 36 வருடத்துக்கு பிறகு, தன்னுடைய பென்சன் நிலுவைத் தொகையை பெற்றார் குறைதீர்ப்பு முகாம் நாளிலேயே அனிதா கானிக் ராணி என்பவர் 20 லட்சம் ரூபாய் பெற்றார் என்பதும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தன்னுடைய உரையின்போது சுட்டிக் காட்டியிருந்தார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+