10th ரிசல்ட்டில் முதலிடம் பிடித்த காவ்யா..தலித் என அடையாளப்படுத்துவதா? ஜான்பாண்டியன் கடும் கண்டனம்
சென்னை: 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி வெற்றி குறித்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தியில் "தலித்" என்று அந்த மாணவியை அடையாளப்படுத்தி இருப்பதைக் படித்த போது மனம் வேதனை அடைந்ததாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் 3 மாணவிகள் தமிழக அளவில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காவிய ஜனனியும் ஒருவர்.
தேர்வில் சாதனை: இவர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கில பாடத்தில் 100, கணித பாடத்தில் 100, அறிவியல் பாடத்தில் 100, சமூக அறிவியல் பாடத்தில் 100 மற்றும் தமிழில் 99 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்களை பெற்று கமுதி மாணவி காவிய ஜனனி சாதனை படைத்துள்ளார். கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் - வசந்தி தம்பதியரின் மகளான இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆங்கில நாளிதழ்: இந்த நிலையில் காவ்யஜனனி வெற்றி குறித்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தியில் "தலித்" என்று அந்த மாணவியை அடையாளப்படுத்தி இருப்பதைக் படித்த போது மனம் வேதனை அடைந்ததாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஒவ்வொரு முறையும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றவர்களை "தலித்" என்ற வார்த்தையால் அடையாளப்படுத்தி உளவியல் தாக்குதல் செய்யும் பத்திரிக்கைகள் தங்கள் செயலை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மனம் வேதனை: தேர்வு முடிவுக்கு அடுத்த நாள் வெளிவந்த ஆங்கில நாளிதழில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி வெற்றி குறித்து வந்த செய்தியை படித்தேன் அதில் "தலித்" என்று அந்த மாணவியை அடையாளப்படுத்தி இருப்பதைக் படித்த போது மனம் வேதனை அடைந்தேன். தன் திறமையால் கடின உழைப்பால் வெற்றி பெற்ற மாணவியை தலித் என்று அந்த செய்தியில் அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது எனது கேள்வி?
குறிப்பிட வேண்டாம்: 25 ஏப்ரல் 2018- ல் தமிழ் நாளிதழில் ஒரு செய்தி வந்தது அந்த செய்தியில் 1982 ஆம் ஆண்டு 10 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு உத்தரவை மேற்கோள்காட்டி மாநில மற்றும் மத்திய அரசு துறை சார்ந்த பணிகளில் பட்டியல் சாதியினரை "தலித்" என்று குறிப்பிட வேண்டாம் என்று அரசு துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று செய்தி வந்தது. அந்த செய்தி இன்றும் ஆவணமாக உள்ளது. இன்னும் சில பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளிவந்தது.
தேவேந்திர குல வேளாளர்: ஆனால் அதே பத்திரிக்கை நிறுவனத்தின் ஆங்கில பத்திரிக்கையில் இன்றும் தலித் என்ற வார்த்தையின் மூலம் "தேவேந்திர குல வேளாளர்களை" அடையாளப்படுத்தும் வன்மம் தொடர்கிறது. தேவேந்திர வேளாளர்கள் இதை விரும்புவதில்லை என்பது தெரிந்தும் தொடர்ந்து அதனை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரம் பேரையூர் கிராமம் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (499/500) மதிப்பெண் பெற்று சாதித்திருப்பதை ஒரு தலித் மாணவி அதிக மதிப்பெண் பெற்று சாதித்திருக்கிறார் என்று அடையாளப்படுத்தி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருப்பது உண்மையில் மன வேதனை அளிக்கிறது.
வன்மத்தோடு செயல்பாடு: அந்த ஆங்கில பத்திரிக்கை ஒரு வன்மத்தோடு செயல்படுகின்றனதோ என்ற கேள்வி எழுப்புகிறது. இந்தப் போக்கை பத்திரிக்கை நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தலித் என்ற வார்த்தையின் மூலம் "தேவேந்திரகுல வேளாளர்" சமூக மக்களை அடையாளப்படுத்தி உளவியல் தாக்குதல் நடத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்று மிகக் கண்டிப்போடு தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த ஆங்கில நாளிதழின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். தன் திறமையால் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து தான் பிறந்த ஊருக்கும், மாவட்டத்திற்கும், படித்த பள்ளிக்கும் தனது பெற்றோருக்கும் மாணவி D.காவ்ய ஜனனி அவர்களை மனதார பாராட்டுகின்றேன். கல்வி மூலம் உயர் பதவி அடைந்து மக்களுக்கு சேவையாற்ற அவரை வாழ்த்துகிறேன்." என கூறியுள்ளார்.

-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications