திமுகவை பற்றி அப்பவே சொன்னேனே கேட்டீங்களா.. பாஜக இன்று வளர யார் காரணம்.. போட்டுடைத்த ஜான்பாண்டியன்
பாஜக தேர்தல் வெற்றி ரகசியம் குறித்து ஜான் பாண்டியன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் பாஜகவின் நிலை உயர்ந்து இருக்கிறது என்றால், அதுக்கு முக்கிய காரணமே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் தான்.. தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வழங்கியதில் அடிப்படையில் நன்றி விசுவாசமாக 80 சதவிகித விழுக்காடு இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்து இருக்கிறோம்" என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த விடையாற்றி உற்சவம் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் காஞ்சிபுரம் வந்திருந்தார்.
தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காஞ்சி சங்கர மடம்,காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் தரிசனம் மேற்கொண்டார். சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:

அரசாணை
"தேவேந்திர குலத்தினர் நன்றி உடையவர்கள். தேவேந்திரகுல வேளாளர்களுக்காக அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையில் நன்றியின் விசுவாசமாக 80 சதவீத விழுக்காடு இந்த முறை பாஜகவிற்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.. அதே மாதிரி, யார் தேவேந்திர குல மக்களுக்கு நன்மை செய்தாலும், அதற்கு விசுவாசமாக நடப்பது தேவேந்திரகுல வேளாளர்களின் நிலை.. அதன் அடிப்படையில்தான், இன்றைக்கு தமிழகத்தில் பாஜகவின் நிலை உயர்ந்துள்ளது.

மீடியாக்கள்
அதற்கு காரணம், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் என்பதை தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் கட்சி என்று சொல்லும்பொழுது எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது மீடியாக்களுக்கு நன்றாகவே தெரியும். விமர்சனங்களையும் பார்த்திருப்பீங்க... எந்த அடிப்படையில் வெற்றி பெற்றார்கள்? மக்களா ஓட்டு போட்டது? கள்ள ஓட்டு போட்டார்களா? அல்லது அதிகாரிகள் ஓட்டு போட்டார்களா? என்று அவர்களுக்குதான் தெரியும்.

ஆளும் கட்சி
திமுக 90% வெற்றி பெறுவார்கள் என்று நான்தான் மீடியாக்களில் அப்பவே சொன்னேனே.. காரணம் ஆளும் கட்சி. அவர்கள் கையில் எல்லாமே இருக்கிறது... அதனால் ஜெயித்து விட்டார்கள்... மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகம். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன். திமுக பட்டியல் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ளாது. அண்ணா திமுகவும் ஏற்றுக்கொள்ளாது.

ஆதரவு
இது, பாரத பிரதமர் மோடி அவர்களால் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளப்படும்... எந்த கட்சியும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எங்களுக்காக யாரும் பரிந்துரை செய்வது கிடையாது... ஆதரவும் கொடுக்க முடியாது. ஆதரவு திரட்டும் வண்ணம் மற்ற கட்சிகளின் தலைவர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.
நிச்சயமாக சந்திப்பேன்.... அப்போது எங்கள் கோரிக்கையை வைப்போம். கொடுத்தால் பார்ப்போம் இல்லாவிட்டால் மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொள்வோம்" என்றார் ஜான்பாண்டியன்.












Click it and Unblock the Notifications