ஒரு லஞ்சுக்காக ரூ.49 லட்சம் பில் கட்டிய ஜானி டெப்! அதுவும் இந்திய உணவிற்காக! அப்படி என்ன சாப்பிட்டார்
சென்னை: மதிய உணவு ஒன்றிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 49 லட்சம் ரூபாய் செலவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பைரைட்ஸ் ஆப் தி கரிபியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனவர் ஜானி டெப். ஆனால் அந்த படங்களை விட.. இவர் அதிகம் பிரபலமானது என்றால் அது தனது மனைவிக்கு எதிரான வழக்கு காரணமாகத்தான்.
தனது முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக ஜானி டெப் அவமதிப்பு வழக்கு தொடுத்து இருந்தார்.

ஆம்பர்
2018ல் வாஷிங்க்டன் போஸ்டில் ஆம்பர் எழுதி இருந்த கட்டுரை ஒன்றில், தான் குடும்ப வாழ்க்கையில் கொடுமைகளுக்கு ஆளானேன் என்று ஆம்பர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஜானி டெப் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, ஜானி டெப் ஆம்பருக்கு எதிராக 50 மில்லியன் டாலர் கேட்டு வழக்கு தொடுத்தார். விர்ஜினியா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.

ஜானி டெப் வழக்கு
இந்த நிலையில் விர்ஜினியா வழக்கில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதில் ஜானி டெப்பிற்கு ஆம்பர் 15 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் சட்ட விதிகளால் இது 10.3 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது. அதே சமயம் ஜானி டெப்பிற்கு எதிரான ஒரு வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தது. இதில் ஜானி டெப் ஆம்பருக்கு 2 மில்லியன் டாலர் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிய உணவு
இந்த நிலையில்தான் மதிய உணவு ஒன்றிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 49 லட்சம் ரூபாய் செலவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கிற்கு இடையில் ஜானி டெப் யு.கேவில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். தனது நண்பர் ஒருவருடன் பயணம் செய்யும் இவர் மக்களை பொது இடங்களில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக பிர்மின்ஹாம் பகுதியில் உள்ள இந்திய உணவகமான வாரணாசி உணவகத்திற்கு ஜானி டெப் சென்றார்.

அசைவ உணவு
அங்கு மதிய உணவு சாப்பிட்டவர், அந்த உணவிற்கு 49 லட்சம் ரூபாய் பில் கொடுத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த ஒரு அசைவ கறி சாப்பிட்டு இருக்கிறார். அதோடு இந்திய ஸ்டைல் ஜோஸ் குடித்துள்ளார். பின்னர் ரோஸ் மதுபானம் ஒன்றும் குடித்துள்ளார். இதற்குத்தான் அவர் 49 லட்சம் கொடுத்துள்ளார். அதோடு இந்திய மதிப்பில் இவர் 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக டிப்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சாப்பிட்ட அந்த கறி என்ன என்று மட்டும் தகவல் வெளியிடப்படவில்லை.

வாரணாசி ஹோட்டல்
இது தொடர்பாக வாரணாசி ஹோட்டல் நிர்வாகி முகமது ஹுசைன் தெரிவிக்கையில், ஜானி டெப் இங்கு வந்து சாப்பிடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு உணவு மிகவும் பிடித்து இருந்தது. அதேபோல் எங்களின் சர்வீசும் பிடித்து இருந்தது. இதன் காரணமாக அவர் அதிக அளவில் டிப்ஸ் கொடுத்தார். அதேபோல் எங்கள் உணவு பிடித்து போய் கூடுதலாக ஒரு பார்சல் வாங்கிவிட்டு சென்றார்., என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications