அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தான் எதிர்காலம்… அமைச்சர் சி.வி. சண்முகம் சரவெடி
விழுப்புரம்: அதிமுக அழிந்துவிடும் என நினைத்தவர்கள், தற்போது, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால்தான் எதிர்காலம் என்ற நிலையில் உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற நடந்து வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தநிலையில் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை, அழிந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் எதிர்காலம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், தங்களுடன் சேர்ந்தால் தான் எதிர்காலம் என்ற நிலையை உருவாக்கி இருப்பதாகவும் இதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆசி என்றார்.
முன்னதாக, பேசிய அமைச்சர் சிவி சண்முகம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்து கொன்றுவிட்டார்கள் என குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.












Click it and Unblock the Notifications