”என்டிஏ கூட்டணிக்கு போனால் அரசியல் வாழ்க்கையே முடிஞ்சிடும்” விஜய்க்கு அமீர் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் என ஒரே நாளில் விஜய்க்கு அரசியலிலும், சினிமாவிலும் அடி விழுந்துள்ளது. இதற்கு மத்தியில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு வர வேண்டும் என விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், "என்டிஏ கூட்டணிக்கு போனால் அரசியல் வாழ்க்கையே முடிஞ்சிடும்" என இயக்குநரும், நடிகருமான அமீர் விஜய்க்கு மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டசபை தேர்தலை முதல் முறையாக போட்டியிட உள்ளது. வழக்கமாக தேர்தல் நேரத்தில் 3 முதல் 4 முனை போட்டிகள் ஏற்பட்டாலும் இறுதியில் திமுக அதிமுக இடையே தான் போட்டி என்று இருக்கும்.

NDA Alliance

ஆனால் நடப்பு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அந்த சூழ்நிலைக்கு சவால் விடும் சூழலை உருவாக்கி உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு திரளும் ரசிகர்கள் கூட்டம்தான். அது வெறும் ரசிகர்கள் கூட்டம் தான், தேர்தலில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்று மேலோட்டமாகவும் சொல்லிவிட முடியாது என்றே பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு திரளும் ரசிகர்கள் எண்ணிக்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மற்ற கட்சிகளை சற்று யோசிக்க வைத்து இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்களும் கருதுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க திமுக தலைமையிலான கூட்டணியோ 26 கட்சிகளுடன் கூட்டணி வைத்து பலமாக உள்ளது. இதனால் வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் விஜய்யின் தவெகவை தன் பக்கம் இழுத்தால் ஈசியாக இருக்கும் என பாஜக கருதுகிறது.

ஏனென்றால் தேமுதிக இந்த முறை அதிமுக கூட்டணியில் இல்லை. விஜய்யும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று தான் சொல்லி வருவதால் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என பாஜகவும் சொல்லி வருகிறது. இதனால் விஜய்யை என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், விஜய்யுடன் தொலைபேசிசியில் பேசி அவரை என்டிஏ கூட்டணிக்கு வருமாறு கூறியதாகவும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு நயினார் நாகேந்திரன் வதந்தி என திட்டவட்டமாக மறுதுள்ளார். எனினும், விஜய் கூட்டணியில் சேரவேண்டும் என்று சொல்லி இன்று ஒரே நாளில் இரு வழிகளில் அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதாவது ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்று வழங்குவது தொடர்பாக தணிக்கை குழு இன்று படத்தினை பார்க்க இருந்தது. ஆனால் தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லி இந்த விவகாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது விஜய் தரப்புக்கு ஒரு நெருக்கடி என்றால், இன்னொரு புறம் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராக வேண்டும் என சொல்லி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இப்படி ஒரே நாளில் விஜய்க்கு அரசியல், சினிமாவில் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படும் நிலையில், இது எல்லாம் விஜய்யை என்.டி.ஏ கூட்டணியில் இணைய வைப்பதற்காகவே என்று சொல்லப்படுகிறது. இதேபோல் விஜய் தொண்டர்கள் சிலரும் என்.டி.ஏ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் நடிகரும், இயக்குநரும் அமீர், விஜய்யை எச்சரிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிபிஐ விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க.
அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்' என விஜய் பெயரை குறிப்பிடாமல் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+