உல்லாச வாழ்க்கைக்காக ரம்யா போட்ட ஆட்டம்.. பாவம் அந்த கணவர்! ஐயப்பனுக்கு மாலை போட்ட காதலன் பண்ண வேலை
சென்னை: நாகராஜி ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பர்தான் வசந்த ராவ்.. நண்பரை சந்திக்க அடிக்க நாகராஜிவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோதுதான் ரம்யாவுடன் உறவு ஏற்பட்டுள்ளது.. ஆனால், இப்போது அந்த குடும்பமே சிதறி சின்னாபின்னமாகிவிட்டது.. என்ன நடந்தது தெரியுமா?
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோனூரை சேர்ந்தவர் அல்லாட நாகராஜி.. இவருக்கு 39 வயதாகிறது.. இவரது மனைவி ரம்யா, 36 வயதாகிறது..

இந்த தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.. ரம்யா ஏற்கனவே விசாகப்பட்டினம் மதுரவாடாவில் வசித்து வந்தபோது வசந்த ராவ் என்பவருடன் நட்பு உருவானது..
கள்ளக்காதல் ரம்யா
ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெக்கலி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த ராவ்.. 31 வயதாகும் ராவுடன் நாளடைவில் நெருங்கி பழகினார் ரம்யா.. ஒருகட்டத்தில் தீவிரமான கள்ளக்காதலாக இது மாறியது.. இந்த தகாத உறவு, நாகராஜிக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. மனைவியை கண்டித்துள்ளார்.. அட்வைஸ் தந்துள்ளார்.. ஆனால் ரம்யா தன்னுடைய நடத்தையை மாற்றி கொள்ளவில்லை..
தினந்தோறும் கணவரின் அறிவுரை அதிகரித்ததால், எரிச்சலடைந்தார் ரம்யா.. இதனால் கணவரை கொல்ல வேண்டும் என்று வசந்தராவிடம் சொல்லி உள்ளார் ரம்யா.. உடனே இதற்கு ஒப்புக் கொண்ட வசந்த ராவ், ராம்பாபு மற்றும் பாண்டு என்ற நண்பர்களுடன் சேர்ந்து கொலை திட்டத்தை தீட்டினார்.. இந்த கொலையை அரங்கேற்ற ரம்யா ரூ.50 ஆயிரம் தந்தாராம்..
ஹோட்டல் ரூம் புக்கிங்
சம்பவத்தன்று ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி என்று சொல்லி, முன்பதிவு செய்துள்ளனர்.. பிறகு நாகராஜியை தண்ணி அடிக்கவும் அழைத்துள்ளனர்..
அதன்படியே ஹோட்டலுக்கு வந்துள்ளார் நாகராஜி.. அங்கே ரூமுக்கு அழைத்து சென்று மது ஊற்றி தந்ததுடன், அனைவருமே ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.. ஆனால் நாகராஜிக்கு மட்டும் அதிக அளவு மதுவை ஊற்றி தந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் குடிபோதையில் நிலைகுலைந்து கிடந்த இருந்த நாகராஜியை, தலையணையால் முகத்தை மூடி, மூச்சு திணறடித்து அனைவருமே கொலை செய்திருக்கிறார்கள்..
பைக்கில் கட்டி இழுத்து
ஹோட்டல் ரூமிலேயே நாகராஜிக்கு உயிர் பிரிந்துள்ளது.. பிறகு உடலை அப்புறப்படுத்துவதற்காகவே வாடகை பைக்கை ஏற்பாடு செய்து, அதில் நாகராஜி உடலை கட்டி திம்மாபுரம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று வீசி உள்ளனர்.
இதற்கு பிறகு, ரம்யா, பி.எம்.பாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழுதுகொண்டே ஓடினார்.. தன்னுடைய கணவர் எப்போதுமே மதுபோதையில் இருப்பார் என்றும், மது போதைக்கு அடிமையான அவர், வீட்டிலிருந்த தங்க நகைகளையும் எடுத்து சென்றுவிட்டதாகவும், அவரை தேடி கண்டுபிடித்துதர வேண்டும் என்று புகார் தந்தார்..
சிக்கிய ரம்யா
ஆனால் கதறி அழுத ரம்யாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.. அதனால் அவரது செல்போன் அழைப்புகளை, அவருக்கே தெரியாமல் ஆய்வு செய்தனர்.. மேலும் செல்போன் டவர் சிக்னல்கள் வைத்தும் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் சம்பவத்தன்று ரம்யாவுக்கு வந்த செல்போன் அழைப்புகள் போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தை தந்தது.. இறுதியில் வசந்த ராவ், ராம்பாபு, பாண்டு ஆகியோர் வசமாக போலீசில் சிக்கினார்கள்.. அவர்கள் அனைவரையுமே பிடித்து விசாரித்தபோது தான் மொத்த உண்மையையும் வாக்குமூலமாக சொன்னார்கள்..
அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் நாகராஜியின் உடல் வெறிச்சோடிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.. பிறகு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.. பிறகு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. தொடர் விசாரணை அவர்களிடம் நடந்து கொண்டிருக்கிறது.
வாடகை ரூம்
ரம்யா - வசந்த ராவ் இடையேயான தகாத உறவு தான் அறிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்த நிலையில் நாகராஜி இறந்த பிறகு ரம்யாவும் வசந்தராவும் வேறு அறை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்ததால் ரம்யா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.
நாகராஜி ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தாராம்.. இவரது நண்பர்தான் வசந்த ராவ்.. நண்பரை சந்திக்க அடிக்க நாகராஜிவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோதுதான் ரம்யாவுடன் உறவு ஏற்பட்டுள்ளது..
நண்பனும், மனைவியும் செய்த துரோக்கத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தாராம் நாகராஜி.. இதில் கணவரை கொல்ல முடிவெடுத்தது ரம்யாதான்..
உல்லாச வாழ்க்கை
கணவரை கொன்றால் உல்லாசமாக வாழலாம் என்ற சொல்லியே வசந்த ராவை சம்மதிக்க வைத்தாராம்.. ஆனால் ஐயப்பனுக்கு மாலை போட்டிருப்பதால், சபரிமலைக்கு சென்று வந்த பிறகு கொலை செய்யலாம் என்று வசந்த ராவ் சொல்லி உள்ளார்..
அதன்படியே சபரிமலைக்கு சென்று வந்த பிறகே நண்பர்களுடன் சேர்ந்து கொலை திட்டத்தை தீட்டி அதை நடத்தி முடித்துள்ளார் வசந்த ராவ்.. கணவரின் சடலத்தை அப்புறப்படுத்தியதுமே, ஒருநாள் முழுக்க யாரும் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று ரம்யா சொன்னாராம்.. இதெல்லாம்தான் போலீசின் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது..
அதுமட்டுமல்ல, கணவர் இறந்ததுமே, ரம்யாவும் வசந்தராவும், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.. அதற்கு பிறகே ரம்யாவின் நடமாட்டத்தைக் கண்காணித்து, போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தபோதுதான் வசமாக சிக்கினார்.. இப்போது மொத்த பேரும் ஜெயிலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications