உல்லாசத்துக்கு தனுஸ்ரீயின் இடைஞ்சல்.. பெற்ற தாய்க்கு வந்த ஆத்திரம்.. அடங்காத குன்றத்தூர் அபிராமிகள்
சென்னை: 2 குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு தரப்பட்டுள்ள ஆயுள் தண்டனை போதுமானதாக இல்லை என்றும், அவருக்கு மரண தண்டனையே தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு தந்த தினத்தின்போதே பொதுமக்கள் கருத்துக்களை கூறியிருந்தனர்.. இந்த பயங்கரமான பெண்ணை எதற்காக நடமாட விட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அபிராமிக்கு தீர்ப்பு தந்த மறுநாளே, கோவையில் கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தையை, பெண் ஒருவர் கொன்றிருந்தார்.. கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்வது இபபோது வரை தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினமும் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.. 33 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் மம்தா.. 26 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 4 வயதில் சரண் என்ற மகனும், 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

மம்தாவின் உறவு
சமீபகாலமாகவே தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக நிறைய தகராறு, சண்டைகள் வெடித்து வந்தன.. இதையடுத்து கணவருடன் கோபித்து கொண்டு, மம்தா தன்னுடைய குழந்தைகளுடன் சப்ஷாபள்ளி என்ற கிராமத்தில் வசித்து வரும் பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற இளைஞருடன் மம்தாவுக்கு நட்பு ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக வளர்ந்தது.. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் பொழுதை கழித்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் கள்ளக்காதலனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்று மம்தா முடிவு செய்தார்.. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு, தனது 4 வயது மகனை பெற்றோரிடம் விட்டுவிட்டு, 3 வயது மகளை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, கள்ளக்காதலன் பயாசுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
குண்டூரில் கள்ளக்காதல் ஜோடி
இந்த விஷயம் கேள்விப்பட்டு கணவர் பாஸ்கர் அதிர்ச்சியடைந்தார்.. எனவே, கடந்த மாதம் 27ம்தேதி சிவம்பேட்டை போலீசில் இது தொடர்பாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் கள்ளக்காதல் ஜோடி ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பது தெரிய வந்தது.
உடனே போலீசார் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்து, நேரடியாகவே அங்கு சென்றார்கள்.. அதிரடியாக மம்தாவின் வீட்டுக்குள்ளும் நுழைந்தனர்.. ஆனால் குழந்தை தனுஸ்ரீயை அங்கு காணவில்லை. எனவே போலீசார் மம்தாவிடம் குழந்தை எங்கே? என்று கேட்டு விசாரித்தனர்..
உல்லாசத்துக்கு இடைஞ்சல்
அதற்கு மம்தா, தன்னுடைய உல்லாசத்துக்கு தனுஸ்ரீ தொந்தரவாக இருந்ததாகவும், அதனால், தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனுஸ்ரீயை கழுத்தை நெரித்து கொன்று, குழி தோண்டி புதைத்துவிட்டதாகவும் அசால்ட்டாக சொன்னார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குழந்தையை புதைத்த இடத்தை காண்பிக்குமாறு மம்தாவிடம் சொல்லி, அங்கு விரைந்து சென்றனர்..
அங்கு சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. தற்போது மம்தா, பயாஸ் ஆகியோரை கைது செய்து இருவரிடமும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஷ்யூ பேப்பர்
2 நாட்களுக்கு முன்புதான் கன்னியாகுமரியில் பெற்ற குழந்தையை ஒரு பெண் கொலை செய்திருந்தார்.. அப்போது அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், "திருமணத்தின்போது கணவர் காட்டிய அன்பு குழந்தை பிறந்த பிறகு குறைந்ததாக எனக்கு தோன்றியது. இதனால் 42 நாள் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன்.
டிஷ்யூ பேப்பரை குழந்தையின் வாயில் திணித்து மூச்சு திணற வைத்தேன். குழந்தை இறந்துவிட்டது" என்று கூறி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தார். இப்போது தெலுங்கானாவில் மீண்டும் ஒரு பெண், தன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டு சிறைக்கு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications