தலைமை செயலகம் வந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.. உதயநிதி ஸ்டாலின் மீது புகார்
சென்னை: தனது தாயாரும், அதிமுக வேட்பாளருமான லீமா ரோஸ் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். தனது குடும்பத்தைக் குறிவைத்து அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
லாட்டரி அதிபர் சார்லஜ் மார்ட்டினின் குடும்பமே அரசியலில் இறங்கி உள்ளது. ஆளுக்கு ஒரு கட்சியில் அரசியலில் இருக்கிறார்கள். சார்லஸ் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் களம் இறங்கி உள்ளது. சார்லஜ் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரியில் தனியாக கட்சி ஆரம்பித்தார். ஆளும் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுள்ளார். லாட்டரி அதிபர் சார்லஜ் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் குறித்து விமர்சனம் செய்தார். இந்நிலையில சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இன்று நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி, லால்குடி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தனது தாயாருமான லீமா ரோஸ் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசினார் என்று குற்றம்சாட்டினார். இந்த விவாகரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்டின், "கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தனது தாயாருமான லீமா ரோஸ் மார்டின் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசினார. இதன்மூலம் எனது தாயாரின் கண்ணியம், மரியாதை மற்றும் சுயமரியாதையைக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவை எங்கள் குடும்பத்தின் நற்பெயரையும் களங்கப்படுத்தி இருக்கிறது.
எங்கள் குடும்பம் அரசியலில் ஈடுபடுவது லாட்டரி தொடர்பான செயல்களை முன்னெடுக்கதான் என்ற நோக்கத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நாங்கள் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கப் போகிறோம் என்று தவறான கருத்தை முன்வைத்திருக்கிறார்.. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது மற்றும் தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கிறார்.
இத்தகைய கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக மீறுவதாகும். குறிப்பாக, அரசியல் எதிரிகளை விமர்சிக்கும்போது அவர்கள் கொள்கைகள் மற்றும் செயல்களை மட்டுமே பேச வேண்டும் என்பதையும், தனிப்பட்ட வாழ்க்கை அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்பதையும் இந்த விதிகள் வலியுறுத்துகிறது.
ஆனால், தேர்தல் நடத்தை விதிகளை உதயநிதி முற்றிலும் புறக்கணித்துள்ளார். தனிப்பட்டத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது குடும்பத்தைக் குறிவைத்து அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது. மேலும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே தான் நான் தேர்தல் ஆணையத்திடம் பு உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்" இவ்வாறு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறினார்.
-
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு..? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்! -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்














Click it and Unblock the Notifications