மோடிஜி.. எல்லாம் ஓகேதான்.. உங்க அன்பு வெறும் வார்த்தைகளில் மட்டும்தானா?.. ஜோதிமணி ட்வீட்!
சென்னை: கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு தாருங்கள்.. உங்கள் அன்பு வெறும் வார்த்தைகளில் மட்டும்தானா என பிரதமர் நரேந்திர மோடிக்கு கரூர் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மன் கீ பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் உரையாடுவார். அந்த வகையில் நேற்றைய தினம் அவர் உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில் உலகிலேயே பழமையான மொழி தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி நான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

கரூர் எம்பி
இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நன்றி பிரதமர் மோடி அவர்களே.அந்த பழமையான தமிழ் கலாச்சாரத்தின் மக்களாகிய எங்களுக்கு தாராளமாக தடுப்பூசி வழங்குங்கள். ஏன் தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறீர்கள்?

அன்பு
நாங்கள் இந்திய ஒன்றியத்தின் அங்கம் இல்லையா? உங்கள் அன்பு வெறும் வார்த்தைகளில் மட்டும்தானா? என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்றைய தினம் மதியத்துடன் தடுப்பூசிகள் காலியாகிவிட்டன. தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.

தடுப்பூசி
தமிழகத்தில் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வமுடன் இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி இல்லை என்பது வேதனையாக இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
|
ஏமாற்றம்
தமிழ்நாட்டில் தடுப்பூசி போட அரசு அழைத்த போது மக்கள் வரவில்லை. விழிப்புணர்வு வந்து மக்கள் வரும் போது தடுப்பூசி இல்லாத நிலை உள்ளது. டெல்டா பிளஸ் வேரியண்ட் தற்போது பரவி வரும் நிலையில் தடுப்பூசி இல்லாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.












Click it and Unblock the Notifications