சைக்கிள் கேப் கிடைச்சா போதும்.. உள்ளே புகுந்து ஜோதிமணி கலாய்த்து விடுகிறாரே
தமிழிசை சவுந்தரராஜனை ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சைக்கிள் கேப் கிடைச்சா போதும்... உள்ளே நுழைந்துவிடுகிறார் ஜோதிமணி!! தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனை கிண்டல் அடிப்பது என்றால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி!
பொதுவாக, பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகைதான்... காலா காலத்துக்கும் ஏழரைதான். அதனால்தானோ என்னவோ, நாடு தழுவிய அளவிலிருந்து மாநில அளவில்வரை ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விட்டு, கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.
எப்போதெல்லாம் சாக்கு கிடைக்குமோ அப்போதெல்லாம் அங்கே வந்து ஒரு கொட்டு வைத்து நக்கல் அடித்துவிட்டு போகிறார் ஜோதிமணி. இன்னைக்கும் அப்படி ஒரு பதிவை போட்டுள்ளார்.
|
தமிழிசை கருத்து
வரும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தராஜன் தனருத கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "இடைத்தேர்தலைவிட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
|
நோட்டா - போட்டியாளர்
இதை பார்த்த ஜோதிமணி, உடனே தன் பாணி கிண்டலை பதிவிட்டுள்ளார். அதில், "திருவாரூர் இடைத்தேர்தலில் NOTA தனது ஆகச்சிறந்த போட்டியாளரை இழந்துவிட்டது😃" என்று நக்கலடித்துள்ளார்.

ஏன் தனியா நிக்கலை?
தமிழிசையை கிண்டல் செய்த ஜோதிமணியின் இந்த ட்வீட்டினை பலரும் கிண்டல் செய்திருப்பதுதான் ஹைலைட்டே!! இடைத்தேர்தலில் போட்டியிடுகிறதோ இல்லையோ, தனித்து நிற்கும் தைரியம் பாஜகவுக்கு கொஞ்சமாவது உள்ளதே, ஆனால் காங்கிரஸ் ஏன் தனித்து போட்டியிடவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஒளிந்து கொள்கிறதே
அகில இந்திய அளவிலான ஒரு தேசிய கட்சி, ஒரு சாதாரண தொகுதியில்கூட தனித்து போட்டியிட திராணி இல்லாமல், கூட்டணி என்ற பெயரில் திமுக பின்னால் ஒளிந்து கொண்டு இடைத்தேர்தலை சந்திக்கிறதே என்று ஜோதிமணியின் ட்வீட்டுக்கு பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications