இதெல்லாம் தமிழகத்துக்கு நல்லதல்ல.. சீரியஸாக பேசிய நிர்மலா சீதாராமன்.. கிண்டல் பதில் அளித்த ஜோதிமணி
சென்னை: பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது தமிழகத்துக்கு நல்லதல்ல என்று பேசிய நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்து பதிலடி கொடுத்துள்ளார் ஜோதிமணி.
தமிழகத்துடன் விரோதமான போக்கை கொண்டுள்ளதாக பிரதமர் மீது தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி திருப்பூருக்கு வரும் 10-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் வருகிறார்.

பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு துறை நிர்மலா சீதாராமன் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது தமிழகத்திற்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிமணி கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சரி விடுங்க.கருப்பு பலூன் காட்டுனா போச்சு என்று தனது டுவிட்டரில் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications