விஜய்யை பார்த்து பயப்படும் சீமான்.. கலைஞர் ‘எபிசோடுக்கு’ இதுதான் காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சி பேச்சாளர் சாட்டை துரைமுருகனும், ஒருங்கிணைப்பாளர் சீமானும் இழிவாக பாடல் பாடி விமர்சித்தது கடும் எதிர்வினைகளை பெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.. ஆனால் அது அவர் பிறந்த சாதியிலிருந்து தொடங்குவது இழிவானது.. அருவருப்பானது என மூத்த பத்திரிகையாளர் நெல்சன் சேவியர் விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை ஒட்டி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், நட்சத்திர பேச்சாளருமான சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

Seaman Karunanidhi

இதனையடுத்து திருச்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளரான அருண், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து சாட்டை துரைமுருகன் தென்காசி குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க காவல்துறை கேட்டுக் கொண்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதி சாட்டை துரைமுருகனை விடுவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், துரைமுருகன் பாடிய அதே பாடலை பாடி கலைஞர் கருணாநிதியை விமர்சித்திருந்தார். மேலும் தமிழகத்தில் தீய அரசியலை தொடங்கியதே கலைஞர் தான் எனவும், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவித்ததை யாராலும் மறந்து விட முடியாது என விமர்சித்தார். அவரது பேச்சுக்கும் திமுகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Seaman Karunanidhi

இந்நிலையில் கலைஞரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.. ஆனால் அது அவர் பிறந்த சாதியிலிருந்து தொடங்குவது இழிவானது.. அருவருப்பானது என மூத்த பத்திரிகையாளர் நெல்சன் சேவியர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில்,"அவர் சண்டாளர்தான். அவர்தான் சக்கிலியர்.

அவர்தான் நாவிதர். அவர்தான் வண்ணார். அவர்தான் அருந்ததியர். அவர்தான் பள்ளர். அவர்தான் பறையர். இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை கடைநிலை சாதிகளும் கலைஞர் சாதி தான்.

இந்திய அரசியலிலேயே பிறந்த சாதியின் காரணமாக தன் வாழ்நாள் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக மோசமான சாதிய தாக்குதலுக்கு உள்ளானவர் கலைஞர். இப்படி எழுதணும்னு நேத்து எழுதி வெச்சேன். ஆனா இந்த விக்டிம் கார்டு அரசியலுக்குள் கலைஞரை எப்போதும் கொண்டு வரக்கூடாதுன்னு தோணுது.

அரசியல் மொழில சொல்லணும்னா, பத்தாயிரம் தலைக்கட்டு கூட இல்லாத கடைநிலை சாதியிலிருந்து எழுந்துவந்து தெற்காசிய அரசியலின் போக்கை, அறிவாலயம் என்னும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, அரை நூற்றாண்டு காலம் திருத்தி எழுதியிருக்கிறர் தெக்காண குரு. ஆதிக்க சாதியில் பிறந்த அரசியல் தலைவர்களை நாம் தமிழர் நிர்வாகிகள் இப்படி விமர்சிக்க மாட்டார்கள். நிச்சயம் செய்ய மாட்டார்கள். வெறுப்பிற்கு எதிராக சமூக நீதி அரசியலை கையில் எடுத்துப் போராடும் எல்லா தலைவர்களும் இந்த தாக்குதலை சந்தித்திருக்கிறார்கள். சந்தித்து வருகிறார்கள். இறந்தபின்னும் தாக்குதல் தொடர்வது கலைஞரது வலிமை.

இது கலைஞர் மீது கொண்ட வெறுப்பல்ல. சமூக நீதி மீது கொண்ட வெறுப்பு. சமத்துவம் மீதான ஒவ்வாமை. நீ எல்லாம் எங்களுக்கு வழிகாட்டுவதா என்கிற ஆண்டாண்டு கால ஆதிக்க சாதி வன்மம். இன்னொரு காரணம்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் யார் வாக்கைப் பிரிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் தமிழர் நிர்வாகிகள்/ தொண்டர்கள் மத்தியில் அக்கட்சி அதிர்வை உருவாக்கி இருக்கிறது. அதன் விளைவுதான் இந்த கலைஞர் எபிசோட்.

ஐம்பதாண்டு காலம் தமிழ்நாடு அரசியலில் மையப்புள்ளியாக இருந்த கலைஞர் ஆதரவு/ கலைஞர் வெறுப்பு என்னும் அதிமுகவின் அரசியல் ஆயுதத்தை திடீரென இம்முறை கையில் எடுத்திருக்கிறது நாம் தமிழர். தீவிர அரசியலுக்குள் விஜய் நுழையும்போது கலைஞர் எதிர்ப்பையும் திமுக எதிர்ப்பையும் இன்னும் தீவிரப்படுத்துவார் சீமான்.

கலைஞரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அது அவர் பிறந்த சாதியிலிருந்து தொடங்குவது இழிவானது. அருவருப்பானது. கலைஞரை மட்டுமல்ல, பிறப்பின் அடிப்படையில் எவர் ஒருவரையும் அடையாளப்படுத்துவதும் நிராகரிப்பதும் நம் தமிழ் மண்ணின் அரசியலுக்கு நேர் எதிரானது. அதன் பெயர் வர்ணாசிரமம்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+