இவ்வளவு கொடூர மனமா? விஜய் கையில் ரத்தக்கறை! அதிமுகவின் ரகசிய திட்டம்! ராஜ கம்பீரன் சுளீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சே விஜய்க்கு கிடையாது எனவும், நடிகை விந்தியாவைப் போல அதிமுகவின் பிரச்சாரகராகவே விஜய் இருப்பார் என கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளரான ராஜ கம்பீரன். மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறிய இரண்டு குடும்பத்திற்கு பணம் தராததன் மூலம் விஜய் கொடூர மனம் படைத்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.

கரூர் நெரிசல் சம்பவத்தை அடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ராஜ கம்பீரன்.

இது தொடர்பாக ஒன் இந்தியா அரசியலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த அவர்," அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் முதலில் அவர் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சையே எடுக்க முடியாது. காரணம் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என கூறி வருகிறார்.

Raja Gambiran vijay tvk edappadi palaniswami aiadmk

ராஜ கம்பீரன்

இதன் காரணமாக அதிமுகவின் ஒரு பிரச்சாரகராகவே விஜய் இருக்க முடியும். ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் விந்தியா போல ஒரு பிரச்சார நடிகராகவே விஜய் பார்க்கப்படுவார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓட்டு கேட்கும் ஒரு நபராகவே விஜய் இருக்க முடியும். மேலும் ஏற்கனவே பாஜகவை பாசிச சக்தி என விமர்சித்ததோடு, எம்ஜிஆர் அதிமுகவை எடப்பாடி காலத்தில் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியவர் எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியும்.

விஜய் அரசியல்

தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை தனித்தன்மையை இழந்து நிற்கிறது. ஒரு பேருந்தில் நிறைய பேர் இருந்தால், அருகில் இருந்த மற்றொரு பேருந்து கிளம்பியதும் ஓடி செல்வார்களோ அதுபோல்தான் விஜய் ரசிகர்களும். 40 வயதுக்கு மேற்பட்ட யாருமே விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள். தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை அரசியலில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி இருக்கிறது. விஜயும் அப்படித்தான்.

தமிழக வெற்றிக் கழகம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் நிதி உதவி வழங்கியிருக்கிறது. ஆனால் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்ற இரண்டு குடும்பத்திற்கும் நிதி உதவி வழங்கவில்லை. இதன் மூலம் விஜய் எப்படி கொடூர மனம் கொண்டவர் என்பது தெரிய வருகிறது. இதுவரை விஜய் மன்னிப்பு கேட்கவில்லை. உண்மையில் அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

அதிமுக கூட்டணி

ஆனால் அதையும் செய்யவில்லை. தனது கையில் ரத்தக்கறை இருப்பதை விஜய் உணரவில்லை. அதிமுகவை பொறுத்தவரை விஜய்யை ஒரு பிரச்சார பீரங்கியாகவே பயன்படுத்த நினைக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்திற்கும் 10 சதவீத வாக்கு வங்கி தான் அதிகபட்சம் இருக்கும். அதை வைத்து தமிழகத்தில் ஆட்சி அமைப்பது என்பதெல்லாம் நடக்காத காரியம்" எனக் கூறியுள்ளார்..

விரிவான வீடியோவை இந்த லிங்கில் காணலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+