Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை பிற்பகல் 3.30 க்கு தமிழக அமைச்சரவை மாற்றம்.. வரலாறே மாறுது.. பத்திரிகையாளர் லட்சுமணன் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது. மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவினை இப்போது பார்ப்போம்.

471 நாட்களுக்கு பின்னர் நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்துள்ளதால் மீண்டும் செந்தில் பாலாஜியை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் 2 மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக இளையவர்கள் 2 பேர் சேர்க்கப்பட உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

senthil balaji udayanidhi stalin

அதில், சேலம் வடக்கு தொகுதி ராஜேந்திரன், ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன் ஆகியோரின் பெயர் அதிகமாக இடம் பெற வாய்ப்பு உள்ளதாம். இதேபோல் ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராவார் என்றும் அதற்கு பதிலாக ஒரு அமைச்சர் நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் நிலையில் அவருக்கு கூடுதல் இலாகாக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் வெளியிட்டுள்ள பதிவில், "பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது.மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை.

ஆனால் கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது. இந்தப் புரட்சிக்கு சமீப பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான். பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர்.

சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவர் போய் ஒருவர் வருகிறார். பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது" என்று கூறியுள்ளார்.

லட்சுமணன் வெளியிட்ட இன்னொரு பதவில், நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது. உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்...?இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன. சீனியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். "அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்" என்று சொல்லிவிட்டார் உதயநிதி.

senthil balaji udayanidhi stalin

வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள். அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துகள். ஆனாலும், முதல்வர் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை உதயநிதிக்கு கூடுதலாகத் தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்ல துறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போடு புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+